எல்லைகள் நிர்ணயத்தில் சிங்கள மக்களுக்கு அநீதி - உள்ளூராட்சி தேர்தலுக்கு தடை கோரும் மனு !

எல்லைகள் நிர்ணயத்தில் சிங்கள மக்களுக்கு அநீதி – உள்ளூராட்சி தேர்தலுக்கு தடை கோரும் மனு !

//
Comment0
Spread the love
உள்ளூராட்சி சபைகளின் எல்லைகள் நிர்ணயத்தில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் உச்சநீதிமன்றத்தில் அம்பகமுவ பிரதேசசபையின் முன்னாள் உறுப்பினரான விதானகமகே நந்தராஜாவே மனுவொன்று தாக்கல் செய்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் அவர் தொடுத்துள்ள மனுவில், “அம்பகமுவ பிரதேச சபையை மூன்று சபைகளாக பிரித்ததால், சிங்கள பௌத்தர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், நல்லிணக்க செயற்பாடுகளுக்கு அது பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். அம்பகமுவ பிரதேச சபையின் எல்லை நிர்ணயத்தில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக உத்தரவிட வேண்டும்.” என்றும் அவர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

ஏற்கனவே உள்ளூராட்சி எல்லைகள் தொடர்பான அரசிதழுக்கு எதிராக மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆறு மனுக்களின் மனுதாரர்களுடன் அரசாங்கம் பேச்சுக்களை நடத்தி எதிரான மனுக்களை விலக்கிக் கொள்ளப்பட்டதை அடுத்து நீதிமன்றம் விதித்திருந்த இடைக்கால நீக்கம் பெற்று தேர்தலுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், உச்சநீதிமன்றில் மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வரும் பெப்ரவரி மாதம் உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இந்த மனு மீது உச்சநீதிமன்றம் தடை உத்தரவுகளை இட்டால், உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவதில் புதிய பிரச்சினைகள் எழலாம் என்று கூறப்படுகிறது.

Leave a Reply