ரோஹின்யா பெண்ணுக்கு தொல்லை பொலிசுக்கு தண்டனை என்ன ?

//
Comment0
Spread the love
சிறிலங்காவில் தஞ்சம் புகுந்த ரோஹின்யா பெண்ணொருவருக்கு எதிராக பாலியல் வல்லுறவு குற்றம் புரிந்த பொலிசுக்கு எதிராக கடூழிய சிறைத்த தண்டனை விதிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பிலான வழக்கு நேற்று திங்கட்கிழமை (4) வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. பாதிக்கப்பட்ட ரோஹின்யா பெண் சார்பில் சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் உள்ளிட்ட 3 சட்டத்தரணிகள் ஆஜராகினர்.

குற்றவியல் சட்டத்தின் பிரகாரம் ஆட்கடத்தல், அச்சுறுத்தல் மற்றும் பாலியல் வல்லுறவு என 3 குற்றசாட்டுக்கள் குறித்த பொலிசுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட சகோதரி தமது வாக்குமூலத்தை ஹிந்தி மொழியில் தெரிவிக்க விரும்பும் நிலையில், அதற்கான மொழி பெயர்ப்பாளர் அவசியப்படுகிறார்.

இந்நிலையில் ஹிந்தி மொழி பெயர்ப்பாளர் ஒருவரை பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நுகேகொடை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிவான் நீதிமன்றத்தினால் 2 வருடங்களுக்கு மேற்பட்ட சிறை தண்டனையை பாலியல் வல்லுறவு வழக்கு குற்றவாளிக்கு வழங்கமுடியாத நிலையில், குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் தயார்செய்து அதனை மேற்முறையீட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கமுடியும்.

இந்த வழக்கில் சந்தேகநபரின் குற்றங்கள் நீரூபிக்கப்படும் சூழ்நிலை நிலவுகையில் குறித்த பொலிஸ்காரனுக்கு கடூழிய சிறை விதிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply