இலங்கை செய்திகள்

தனிநாட்டுக் கோரிக்கையை விக்னேஸ்வரன் முன்னகர்த்தினால் ???

//
Comment0
Spread the love
வடமாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தனிநாட்டுக் கோரிக்கையை முன்னகர்த்தினால் அரசும் வேறு கதையேயின்றி அதை அங்கீகரிக்கும் என முன்னாள் கடற்படைத் தளபதியும் முன்னாள் பிரதியமைச்சரும் ‘எலிய’ அமைப்பின் கவுரவத் தலைவருமான சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் ஊடகச் சந்திப்பொன்றின்போது பேசியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் தொடர்ந்தும் கூறுகையில்,“முன்னாள் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்தவின் ஆட்சிக் காலத்தில் அடங்கிக் கிடந்த வடமாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், புதிய ஆட்சியில் மிக சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார். அதுமட்டுமன்றி, தனது பதவியையும் அதிகாரத்தையும் வைத்து நாட்டுக்குப் பொருந்தாத சட்ட மூலங்களை இயற்றிக்கொள்ள அவர் முயற்சிக்கிறார்.

ஒருவேளை, தனிநாட்டுக் கோரிக்கையை முன்னகர்த்தினால் தற்போதைய அரசும் வேறு கதையேயின்றி அதை அங்கீகரிக்கும். இதற்காக நாட்டையோ, நாட்டு மக்களையோ காட்டிக் கொடுக்கவும் தற்போதைய அரசு தயங்காது.”என கூறியுள்ளார்.

Leave a Reply