இலங்கை செய்திகள்

‘தாருன் நுஸ்ரா’ இல்லத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு நீதி கோரி போராட்டம்

//
Comment0
Spread the love
கொஹுவளையில் அமைந்துள்ள ‘தாருன் நுஸ்ரா’ ஆதரவற்றோர் இல்லத்தில் பாலியல் துஷ்பிரயோத்தால் பாதிக்கப்பட்ட 18 சிறுமிகளுக்கு நீதி கோரி கங்கொடவில நீதவான் நீதிமன்றத்துக்கு எதிரில் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளது.

மேற்படி குற்றச்சாட்டுத் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையால் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய, குறித்த ஆதரவற்றோர் இல்லத்தில் சாரதியாகப் பணிபுரிந்த நபர், கொஹுவளை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

கங்கொடவில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபர், இரண்டு த​டவைகளும் விளக்கமறியல் வைக்கப்பட்ட பின்னர், பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், நாளை கங்கொடவில நீதவான் நீதிமன்றத்துக்கு முன்னால் காலை 9 மணிக்கு இந்தக் கவனயீர்ப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

குறித்த தினத்தன்று, இச்சம்பவம் தொடர்பான வழக்கு, நான்காவது தடவையாகவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply