பிட்ச் ரேட்டிங் சர்வதேச நிறுவனம் சிறிலங்காவிற்கு தந்துள்ள அங்கீகாரம் !

பிட்ச் ரேட்டிங் சர்வதேச நிறுவனம் சிறிலங்காவிற்கு தந்துள்ள அங்கீகாரம் !

//
Comment0
Spread the love
பிட்ச் ரேட்டிங் சர்வதேச நிறுவனத்தினால் மின்சாரத்துறையில் கொண்டிருக்கும் சிறப்பான செயற்பாட்டுக்கு வழங்கப்படும் ‘ட்ரிபிள் ஏ’ சான்றிதழ் சிறிலங்கா மின்சார சபைக்கு பெற்றுள்ளது சர்வதேச ரீதியில் சிறந்த அங்கீகாரமென மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன் பொழுது அவர் தொடர்ந்தும் கூறுகையில்,”கடந்த சில நாட்களுக்கு முன்னர் தென்பகுதியில் ஏற்பட்ட சூறாவளியினால் 10 இலட்சம் நுகர்வோருக்கான மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டது. இதில் 97 வீதம் இணைப்புக்கள் மீள வழங்கப்பட்டுள்ளன. சிறப்பான மின்சார கட்டமைப்பு மற்றும் திறமையான அதிகாரிகளின் வினைத்திறனான சேவையின் ஊடாக ஒருசில நாட்களிலேயே மின்விநியோகத்தை சுமுகமாக்கியிருக்கிறது.

அண்மைய இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மின் விநியோகம் 97 வீதம் பெருமளவு சீர்செய்யப்பட்டிருந்தது.

மின்சார தட்டுப்பாடு இருப்பதாக சிலர் கூறுவருகின்றனர். உண்மையில் அவ்வாறான தட்டுப்பாடுகள் எதுவும் இல்லை.

இவ்வாறான நிலையில் மின்சாரக் கட்டணங்களை அதிகரிப்பதற்கோ அல்லது மின்சார துண்டிப்புக்களை மேற்கொள்வதற்கோ நடவடிக்கை எடுக்கப்படாது. இந்த உறுதிமொழியை நாம் நுகர்வோருக்கு வழங்குகின்றோம்.”என தெரிவித்துள்ளார்.

Leave a Reply