இலங்கை செய்திகள்

மகிந்த அணி வேறுயாரையும் ஆதரித்தால் நடவடிக்கை எடுப்போம் – சமரசிங்க எச்சரிக்கை

//
Comment0
Spread the love
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைத் தவிர வேறு எந்தக் கட்சியையும் கூட்டு எதிரணியினர் ஆதரித்தால் கட்சியின் விதிமுறைகளை மீறும் செயலுக்கு எதிராக நாம் நடவடிக்கை எடுக்க முடியும் என துறைமுக மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க எச்சரித்துள்ளார்.

கொழும்பில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

இது குறித்து அவர் தொடர்ந்தும் கூறியிருப்பதாவது,”ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் மொட்டிற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லையெனவும் அது ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரிப்பதற்காக உருவாக்கப்பட்டதொரு கட்சி. அந்தக் கட்சி தம்முடன் இணையாவிட்டாலும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெற்றிபெறும்.

எனினும் ஜனாதிபதி மைத்திரி தலைமையிலான சுதந்திரக் கட்சியைத் தவிர்த்து
வேறொரு கட்சியை அவர்கள் ஆதரிப்பார்களேயானால் அது கட்சியின் விதிமுறைகளை மீறுவதாக அமையும். அவ்வாறான சந்தர்ப்பத்தில் அதை எதிர்த்து நாம் நடவடிக்கை எடுக்கவும் முடியும்.

வரப்போகும் உள்ளூராட்சித் தேர்தலில், மகிந்த ராஜபக்சவின் உதவி இல்லாமலேயே நிச்சயமாக வெற்றிபெறும். முன்னெப்போதையும் விட தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுடன் பெரும்பாலானோர் ஒன்று திரண்டு வருகிறார்கள். கதவுகள் இன்னும் திறந்துதான் இருக்கின்றன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுடன் யாரும் வந்து இணையலாம்.”என அவர் தெரிவித்தார்.

Leave a Reply