இலங்கை செய்திகள்

EPLRF தொடர்ந்து தமிழரசுடன் இணைந்து போட்டியிடுவதில்லை என ரெலோவும் முடிவு !

//
Comment0
Spread the love
உள்ளூராட்சித் தேர்தலுக்கான ஆசனப் பங்கீட்டு பேச்சுக்களில் ஏற்பட்ட இழுபறி காரணமாக கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோ, உள்ளூராட்சித் தேர்தல்களில் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதில்லை என்று முடிவு செய்துள்ளதாக அறியவந்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையில் நேற்று நடந்த உள்ளூராட்சித் தேர்தலுக்கான ஆசனப் பங்கீட்டு பேச்சுக்களில் ஏற்பட்ட இழுபறி நிலையை அடுத்தே ரெலோ இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

நேற்று யாழில் தமிழரசுக் கட்சியின் தலைமையகத்தில் கூட்டமைப்பு கட்சிகளின் இடையே நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் ஆசனப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையிலேயே ரெலோ பொதுச்செயலர் என்.சிறிகாந்தா வெளியேறியதும் அதை தொடர்ந்தே இவ்வறிவிப்பு வெளியானதும் கவனிக்கத்தகும்.

இந்தப் பேச்சுக்களில், உடன்பாடு எட்டப்படாத நிலையில்,வவுனியாவில் கூடிய தலைமைக் குழுக் கூட்டத்தில் வரும் உள்ளூராட்சித் தேர்தலில், தமிழரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதில்லை என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ரெலோ

இது குறித்து ரெலோ பொதுச்செயலர் என்.சிறிகாந்தா கூறுகையில்,”தமிழரசுக் கட்சி விடாப்பிடியான, விட்டுக் கொடுப்பற்ற நிலைப்பாட்டில் இருப்பதால், வேறு வழியின்றி இந்த முடிவை எடுத்து உள்ளோம். அதேவேளை, இன்று யாழ்ப்பாணத்தில் நடக்கவுள்ள கட்சியின் தலைமைக் குழுக் கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்படும்.” என்றும் அவர் கூறியுள்ளார்.

ஈபிஆர்எல்எவ்

கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளாக இருந்த ஈபிஆர்எல்எவ் ஏற்கனவே தமிழரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்திருந்தது.

புளொட்?

ரெலோவும் தற்போது அந்த முடிவை எடுத்துள்ளது. ஆசனப் பங்கீடு தொடர்பான பேச்சுக்களில் புளொட்டும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply