மீனவரின் உயிர்களை கண்டுகொள்ளாத அரசு - கொதிந்தெழுந்தனர் மக்கள்!

மீனவரின் உயிர்களை கண்டுகொள்ளாத அரசு - கொதிந்தெழுந்தனர் மக்கள்!
மீனவரின் உயிர்களை கண்டுகொள்ளாத அரசு - கொதிந்தெழுந்தனர் மக்கள்!

மீனவரின் உயிர்களை கண்டுகொள்ளாத அரசு – கொதிந்தெழுந்தனர் மக்கள்!

//
Comment0
Spread the love

<div> ஒக்கி புயலினால் கடலில் சிக்கி கரைதிரும்பாத மீனவர்களை மீட்க அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளாததால் கன்னியாகுமரியில் மீனவர்கள், பொதுமக்கள் கொதித்தெழுந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி கடற்பகுதியில் ஏற்பட்ட ஒக்கி புயலில் சிக்கி ஏராளமான மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். இது ஒட்டுமொத்த தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மீனவர்களுக்கு உதவ பரவலாக அனைத்து மக்களும் செயலாற்றி வருகின்றனர்.

ஆனால், மீன்பிடிக்கு கடலுக்கு சென்று புயலில் சிக்கி காணாமல்போன ஏனைய மீனவர்களை மீட்க வேண்டிய கடைமையை கொண்டிருக்கும் அரசு, ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு மேலோங்குகிறது.

மக்களின் பிரதிநிதியாக இருக்கவேண்டிய ஆட்சியாளர்களோ, அரசின் பிரதிநியாக உருமாறி மீனவர்களின் உயிர் பிரச்சனையின் தீவிரத்தை குறைத்துக்காட்டுவதாக குற்றாம்சாட்டப்படுகிறது.

கன்னியாகுமரியை அண்மித்த பகுதிகளில் இருந்து காணாமல்போன ஏராளமான மீனவர்களின் நிலை என்னவென்று தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கும் மக்கள், பொறுமையிழந்து இன்று மாபெரும் பேரணியை முன்னெடுத்தனர்.

முதலில் ஊர்வலமாக சென்ற மக்கள் பின்னர் அரசை கண்டித்தும், தங்களது கோரிக்கையை முன்வைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தம் உறவுகளை இழந்த பெண்கள் கதறி அழுது முழக்கமிட்டனர்.

தொடர்ந்து குழித்துறை  ரயில்நிலையத்தில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள், தண்டவாளத்தில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மீனவர்களின் துயர நிலை அனைத்து தரப்பு மக்களின் கவனத்துக்கும் சென்றுள்ளது.

</div>

Leave a Reply