லட்சத்தீவிலிருந்து 45 மீனவர்கள் மீட்பு!

லட்சத்தீவிலிருந்து 45 மீனவர்கள் மீட்பு!
லட்சத்தீவிலிருந்து 45 மீனவர்கள் மீட்பு!

லட்சத்தீவிலிருந்து 45 மீனவர்கள் மீட்பு!

//
Comment0
Spread the love
கன்னியாகுமரி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 45 மீனவர்கள் லட்சத்தீவிலிருந்து மீட்கப்பட்டு கொச்சி கொண்டுவரப்பட்டுள்ளனர்.ஒக்கி புயலினால் கடலில் சிக்கிய ஏராளமான மீனவர்கள் கரை திரும்பாததால், அவர்களது உறவினர்கள் தவித்து வருகின்றனர்.

மீனவர்களை மீட்க ஆக்கபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி கடந்த இரண்டு நாட்களாக கன்னியாகுமரி மீனவர்கள் பெரும் திரளான போராட்டத்தையும் முன்னெடுத்தனர்.

இந்நிலையில், புயலில் சிக்கி லட்சத்தீவில் தவித்துக்கொண்டிருந்த 45 மீனவர்களை இந்திய கடலோர காவல் படை மீட்டு கொண்டுவந்துள்ளது. தற்போது கொச்சி, திருவனந்தபுரம் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் அவர்களது விவரங்கள் விரைவில் வெளியிடப்படுமென தெரிகிறது.

Leave a Reply