Hunger strike in university of madras

//
Comment0
Spread the love

சென்னை பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் முன்னெடுத்த சாகும் வரை பட்டினி போராட்டம் 14/04/2018 காலை 8 மணி அளவில் முடிவுக்கு வந்தது.
மாணவர்கள் உயிரை துச்சமென மதித்து நடத்திய போராட்டத்தை மாநில அரசு அலட்சியப்படுத்தியது.
போராட்டத்தின் வடிவம் எதுவாக இருந்தாலும் அதன் பலம் அதன் திரளிடமே இருக்கிறது.
அரசு நேற்று இரவே முடிக்க வேண்டும் என்று அழுத்தம் தந்தது. எப்படியாயினும் இன்னும் ஒருநாள் நீட்டிப்பது என்ற முடிவுக்கு வந்தார்கள் மாணவர்கள்.அதற்கு பல்கலைக்கழக துணை வேந்தர் இசைந்தார்.

இந்த போராட்ட வடிவம் மாணவர்களுக்கும் ஒரு மிகப்பெரிய படிப்பினையாக அமைந்தது.
போராடினால் மக்களின் ஆதரவு நிச்சயம் இருக்கும் என்பதையும் , ஒரே நாளில் ஆதரவு பெருகிவிடாது என்பதையும் , ஒரு போராட்டத்தை துவங்குவதற்கு முன் விரிந்த அளவிற்கு முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என்பதையும் புரிந்துக்கொண்டனர்.
பட்டினி போராட்டம் தற்போதைக்கு முடிவுக்கு வந்தாலும் இதே கோரிக்கைகளை முன்னிட்டு அனைத்து கல்லூரி மாணவர்களையும் சந்தித்து மிகப்பெரிய மாணவர் திரளுடன் உழைக்கும் மக்கள் , தோழமை சக்திகளுடன் கைகோர்த்து முன்னெடுப்பார்கள்

Leave a Reply