ஒரு நாள் பலஸ்தீனர்கள் விடுதலை அடைவார்கள்..,அபுதாஹிர்

//
Comment0
Spread the love
Image result for palestine
மனிதர்களை மூன்று வகையை பிரித்துக்கொள்வோம். ஒரு செயலை தொடர்ந்து நடக்கும் எதிர்வினைகளே மனிதனின் தன்மையை நிர்மாணிக்கிறது. உதாரணமாக ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார் என்றால் அவரை மருத்துவ ஊர்தியில் அழைத்து செல்வோம். அவ்வாறு செல்கையில் அதன் எச்சரிக்கை ஓசையை கேட்டு மக்கள் தாங்கள் செல்லும் பாதையில் இருந்து விலகி மருத்துவ ஊர்திக்கு வழிவிடுவார்கள். அதில் உள்ள நோயாளிக்கும பிரார்த்தனையும் செய்வார்கள் கூட. மக்களில் இவர்கள்தான் பெரும்பாலானவர்கள், சாதாரண மக்கள் இவர்கள் ஒருவகை.. ஒரு சிலர், அந்த அவசர ஊர்திக்கு பின்னால் தங்கள் வாகனத்தை வேகமாக ஓட்டுவார்கள், தாங்கள் செல்ல வேண்டிய இடத்தை சீக்கிரமாக சென்று விடலாம் என்ற எண்ணம் அவர்களுக்கு. இம்மக்கள் தான் சுயநலவாதிகள், இவர்கள் வாழ்க்கை யாருக்கும் பயனளிக்காது, எந்த ஒரு நிகழ்வும் இவர்களிடம் எந்த தாக்கத்தையம் ஏற்படுத்தாது,  இத்தகைய மக்கள் இரண்டாம் வகை.
கடைசியாக பார்க்கும் மூன்றாம் வகையானவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்.இவர்கள் ஒரு இடத்திற்கு சீக்கிரமாக செல்ல வேண்டும் என்றால், ஒரு மனிதனை கொலையும் செய்வார்கள், பின்பு அவனை காப்பாற்ற போகிறோம் என்று சொல்லிக்கொண்டு அதே அவரச ஊர்தியிலும் செல்வார்கள், தங்கள் லட்சியம் வெல்ல அந்த கொலை பழியை தன் எதிரியின் மேல் திணித்து ஒரு வெறுப்பு பிரச்சாரம் செய்து பெரும் வன்முறையை தூண்டுவார்கள். இவர்கள் தன பாசிஸ்ட்கள். ஹிட்லரின் சிந்தனை போற்றுபவர்கள்.. கோட்சே மகாத்மா காந்தியை கொலை செய்தபோது தன கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்தி இருந்தது, இதன் மூலம் ஒரு பெரும் வன்முறையை ஏற்புடுத்தத்தான். இது முழுக்க பாசிச வெளிப்பாடுதான்.
இத்தகைய பாசிச சிந்தனை கொண்டவர்கள் தான் பெரும்பான நாட்டின் ஆட்சியாளர்கள். மக்களிடையே வன்முறை சிந்தனையை விதைத்து அவர்களின் மனிதாபிமான சிந்தனையை கொன்றும் விட்டார்கள்.. இந்தியாவில் எப்படி பாசிஸ்ட்கள் பாபர் மசூதியை இடித்து அந்த இடத்தில ராமர் கோயில் கட்டுவோம் என்று வெளிப்படையாக தேர்தல் வாக்குறுதி கொடுத்தார்களோ, அப்படி ஒரு வாக்குறுதியை தான் அமெரிக்கா அதிபர்கள் கிளிண்டன், ஜார்ஜ் புஷ் மற்றும் டொனால்ட் டிரம்ப் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் அவர்கள் ஆட்சி அமைத்தவுடன் ஜெருசலேமில் அமெரிக்கா தூதரகத்தை அமைப்போம் என்று அறிவித்தார்கள். அதற்கு காரணம் அங்கு அரசியலில் வெற்றி தோல்வி நிர்ணயிக்கும் இவங்கெளிகள் கிறித்துவர்களின் யூத இஸ்ரேலிய ஆதரவு.
Image result for palestine
1995ம் ஆண்டுலேய அமெரிக்கா ஜெருசலேம் தூதரக சட்டம் என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றியது, அதன்படி அமெரிக்கா தனது தூதரகத்தை டெல்அவவ் (தற்போதய இஸ்ரேலிய தலைநகர்) இருந்து ஜெருசலேமிற்கு மாற்றிக் கொள்ளவேண்டும். ஆனால் அவ்வாறு செய்யின் உலகநாடுகளின் எதிர்ப்பை அமெரிக்கா சந்திக்கும் என்ற காரணத்தால் கிளின்டன், புஷ் போன்ற அதிபர்கள் இந்த சட்டத்தை அமல்படுத்தவில்லை. 6 மாதத்திற்கு ஒவ்வொரு முறை அமெரிக்கா அதிபர்கள் கையெழித்திட்டு இந்த சட்டத்தை இருட்டடிப்பு செய்தார்கள். அதிபர் டிரம்ப் கூட ஜூன் மாதம் இந்த சட்டத்தை அமல்படுத்தாமல் இருக்க கையெழுத்திட்டார் ஆனால் டிசம்பர் மாதம் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார். தான் மற்ற அதிபர்கள் போல் இல்லை என்று அவரே தம்பட்டம் அடித்தார். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவோம் என்று சூளுரைத்தார், காரணம் இவங்கெளிகள் கிருத்துவர்கள் 81 சதவீதம் டிரம்ப்க்கு வாக்களித்தார்கள், அவர்கள் இசுரேலிய ஆதரவானவர்கள்..
ஐநா சபை இதை நிராகரித்தாலும், அமெரிக்கா தனது தூதரகத்தை ஜெருசலேமிற்கு மாற்றினால் அது இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்தது போல் ஆகும். அமெரிக்காவை ஒரு தனி நாடாக கருதி இது அவர்களின் தூதரக பிரச்னை என்று இருக்க முடியாது, காரணம் உலகத்தை ஆதிக்கம் செய்வது அமெரிக்கா தான். உலகத்தில் அறிவிக்கப்படாத ஆட்சியாளரும் கூட. மேலும் ஜெருசலேம் இஸ்ரேலின் பகுதியும் அல்ல அது முழுக்க ஆக்கிரப்பு செய்யப்பட்ட பகுதி.
 Related image
1948 அரேபிய யுத்தத்திலும், 1967 எகிப்து,ஜோர்டன்,சிரிய யுத்தத்திலும் இஸ்ரேல் வெற்றி பெற்று அந்த பகுதிகளை கைப்பற்றியது. 1980-இல் ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அறிவித்தது, ஐநா சபை இத்தீர்மானத்தை நிராகரித்தது, மேலும் ஆக்கிரப்பு செய்யப்பட்ட பகுதிகளை விட்டு இஸ்ரேல் வெளியேற வேண்டும் என்று கூறியது. இஸ்ரேல் இதை செய்ய மறுத்ததுடன் பற்பல யூத குடியிருப்புகளை அமைத்துக்கொண்டு இருக்கிறது. தற்போது இது சர்வதசே பாதுகாப்பின் கீழ் உள்ளதால் அமெரிக்கா தன்னிச்சையாக சர்ச்சையான பகுதியை இஸ்ரேல் தலைநகராக அறிவித்தது நிச்சியமாக விதிமீறல் தான். மேலும் இவ்விடம் மூன்று மதத்தினரும் சொந்தம் கொண்டாடுவதால் இது சர்வதேச பாதுகாப்பின் கீழ் உள்ளது.
பாலஸ்தீனில் வந்து குடியேறி பின்பு தங்கள் இடத்தை ஒரு நாடக (இஸ்ரேல்) அறிவித்தது மட்டும் அல்லாமல் பலஸ்தீனையே இல்லாமல் செய்து கொண்டுருக்கும் இஸ்ரேலை – ஒரு நாடக பார்ப்பதே தவறு. ஆனால் அந்த நாட்டிற்கு எல்லா உதவியும் செய்து அதன் ஆக்கிரப்பு பகுதியையும் தலைநகராக அறிவித்ததால் அமெரிக்கா உலக நாடுகளின் கோபத்திற்கு உள்ளாகி, ஐநா வாக்கெடுப்பில் பெரும் தோல்வி அடைந்து உலக அரங்கில் தனிமைப்பட்டும் போனது.
தற்போதே ஜெருசலேமில் பல லட்சம் முஸ்லிம்கள் அகதிகள் போலவும், சொந்த நாட்டின் நாடற்றவர்களாகும், ஒரு குடியுரிமை கூட இல்லாத நிலையில் இருக்கிறார்கள், அதை இஸ்ரேல் பகுதி என்று அறிவித்தால் அவர்கள் நிலை இஸ்ரேலிய அரசால் என்னாகும் என்று அமெரிக்கா சிந்திக்கவில்லை. பாலஸ்தீனம் அனு தினமும் தாக்கப்படும் நிலையில் – சமாதானம் ஏற்படுத்தி அமைதியை ஏற்படுத்தி இருக்கவேண்டிய அமெரிக்கா அரபு தேசத்தில் ஒரு பெரும் போர் உருவாக்க துடிக்கிறதோ என்ற அச்சம் ஏழாமலில்லை.
நிச்சியம் ஒரு நாள் பலஸ்தீனர்கள் விடுதலை அடைவார்கள் என்ற எண்ணத்துடன்..
Image result for palestine
அமெரிக்காவிற்கு எதிராக ஐநா-வில் வாக்களித்த இந்திய அரசை பாராட்டாமல் இருக்க முடியாது.
அபுதாஹிர்

Leave a Reply