அச்சமில்லை அச்சமில்லை

//
Comment0

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

சொந்தமண்ணில் சாவு வந்து
செத்தொழிந்து போகினும்
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்பதில்லையே.

காவுகொள்ளக் கங்கணங்கள்
கட்டி நிற்கும் போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்பதில்லையே

எட்டி உயிர் பறித்து விட
எத்தனிக்கும் போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்பதில்லையே

மொழி மடந்தை புகழ்வதனால்
சாவு வந்து சேரினும்
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்பதில்லையே

வாய்மொழியில் வல்லவர்கள்
வசைகள் பாடும் போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்பதில்லையே

உள் நரம்பு புடைத்து நின்று
வெடித்து விழும் போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்பதில்லையே

செங்களத்தில் என் கழுத்தை
சிங்களமே சீவினும்
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்பதில்லையே

என் மொழியை காக்க எண்ணி
என் உயிரே போயினும்
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்பதில்லையே

…..கவிப்புயல் சரண்………

Leave a Reply