இடைவெளிகள்…பானு இக்பால்.

//
Comment0

தடாகத்தில் இறங்கி விட்டான் அவன்💖
மோக கூட்டை உடைத்து வெளியேறினேன் நான்💛

காதலின் ஆதி மரபுப் படி அவன்
முத்தத்தில் தொடங்கினான்
மெத்தென்று அணைத்து கொண்டான்
ரோமங்கள் சிலிர்க்க உடலாக பின்னிக்கொண்டோம்
சாக்லேட் கண்ட குழந்தையாய்
என்னை அவனும்
அவனை நானும்
எடுத்து கொண்டோம்
உருகும் பனியாய்
பொழுதுகள் போயின💛

எனக்காக நேரம் ஒதுக்கவில்லையென நானும்
தனக்கு பிடித்த மாதிரி நடந்துகொள்ளவில்லை அவனும்
அம்புகளை தொடுத்து கொண்டோம்
காயங்கள் கொண்டோம்
மருந்தாய் மாறினோம்💚

பாசமெனும் நூலைகொண்டு
உறவை பட்டுப்போகாமல்
பார்த்து கொண்டோம்
ஆனாலும் இடைவெளி விழுந்துவிட்டதை
அப்படியே தான் விட்டு வைத்திருக்கிறோம்❤

இடைவெளிகள் நல்லது தான்
உன்னை நான் படிக்கவும்
என்னை நீ படிக்கவும்💛

அழகான இடைவெளிகள்
விடுதலையின் பூரண குணம் கொண்டிருக்கும்💙

சுதந்திரம் தரும் உணர்வை
பட்டோ நகையோ மாளிகையோ
தந்திடுமா – இல்லை
அவனும் தான் தந்திடுவானா💝

மாயா💓
(பானு இக்பால்)

Leave a Reply