இந்தி கற்பது கட்டாயம் என்ற வரைவை திரும்ப பெற்றது மோடி அரசு.

//
Comment0

கஸ்தூரிரங்கனின் தலைமையில் அமைக்கப்பட்ட குழு மத்திய அரசிடம் சமீபத்தில் அளித்த வரைவில் பள்ளிகளில் மூன்றாவது மொழியாக கட்டாயம் இந்தி பயில வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தது.இந்தி பேசாத மாநிலமாக இருந்தாலும் கட்டாயம் இந்தி கற்க வேண்டும் என்றும் அந்த வரைவில் முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்த “இந்தி கட்டாயம்” முயற்சிக்கு அனைத்து மாநிலங்களிலும் இருந்து உடனடியாக எதிர்ப்பு கிளம்பியதால் அந்த வரைவில் இந்தி கற்பது கட்டாயமில்லை என்று தனது முன்வைப்பை திரும்ப பெற்றிருக்கிறது மத்திய அரசு.

அரசியலமைப்பு சட்டம் மாநில மொழிகளுக்கு உரிமைகளும்,சுதந்திரமும் வழங்கியிருந்தாலும் மத்திய அரசுகள் அவற்றை மதிக்காமல் இந்தியை கட்டாயமாக்க முயற்சித்த வண்ணம் உள்ளன.இப்போதும் மீண்டும் உருவான பலத்த எதிர்ப்பு மோடி அரசை பணிய வைத்திருக்கிறது.

Leave a Reply