எரியும் சவூதி எண்ணெய் கிணறுகள். – அபராஜிதன்.

//
Comment0

கடந்த சனிக்கிழமை 14.09.2019 அன்று சவூதி அரேபியாவின் கிழக்கு பகுதியான அப்குவெய்க்கில் உள்ள ஆராம்கோவின்(Aramco) எண்ணெய் கிணறுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன.
ஏமனை சேர்ந்த ஹூத்தி போராளிகள் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளனர்.

சவூதி அரேபியா பக்கத்து நாடான ஏமனில் நடக்கும் உள்நாட்டு போரில் ஓரு பக்கத்தை ஆதரிப்பதால் தொடர்ந்து ஏமன் மீது விமான தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் பலர் உயிரிழந்த வண்ணம் உள்ளனர்.இதற்கு பதிலடியாக ஏமன் போராளிகளும் ராக்கெட் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

இந்த முறை ஆளில்லா பறக்கும் இயந்திரத்தின்(Drone) மூலமாக தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். சவூதி அரேபியா, அமெரிக்கா போன்ற நாடுகள் இந்த தாக்குதலின் பின்னணியில் ஈரான் இருப்பதாக குற்றம் சாட்டி வருகிறார்கள்.அதனை ஈரான் மறுத்துள்ளது.

இந்த தாக்குதல் சவூதி அரேபியாவிற்கு கடும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.அதன் மொத்த எண்ணெய் உற்பத்தியில் பாதியளவிற்கு இந்த தாக்குதலினால் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதனால் உலக அளவில் கச்சா எண்ணெய்யின் விலை கடுமையாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.