காசுமீர் – எரியும் பனிமலை – 6-க.இரா. தமிழரசன்

//
Comment0

கட்டுக்கதை – 4 : ஜம்மு & காஷ்மீரில் தகவல் அறியும் உரிமை சட்டம் அமலில் இல்லை.

உண்மை : தகவல் அறியும் உரிமை சட்டம், 2005 அக்., 12 முதல், ஜம்மு – காஷ்மீர் தவிர, மற்ற மாநிலங்கள் அனைத்திலும் அமலுக்கு வந்தது.

இந்திய அரசின் சார்பில் நாடாளுமன்றத்தில் 2005ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தகவல் அறியும் உரிமை சட்டம், இரண்டாண்டுகளுக்கு பிறகு மாநில சட்டப்பேரவையின் ஒப்புதலுடன் ஜம்மு & காஷ்மீர் தகவல் அறியும் உரிமைச் சட்டம் அமலுக்கு வந்தது.

கட்டுக்கதை – 6 : சட்டப்பிரிவு 360 (நிதி அவசர நிலை பொருந்தாது)

இந்திய அரசமைப்பு அமலுக்கு வந்தத்தில் இருந்து இதுவரை நிதி நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டதில்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் பிரிவுகள் 352, 356, 360களின் கீழ் அவசர நிலைகள் குறித்து விளக்கப்படுகின்றது. இதில் பிரிவு 360 நிதி நெருக்கடி நிலை குறித்து விளக்குகின்றது. இதில் எந்த பிரிவுகளிலும் காஷ்மீருக்கு இது பொருந்தாது எனக் குறிப்பிடவில்லை. சட்டப்பிரிவு 370ன் படி காஷ்மீருக்கு பிரிவு 238 மட்டுமே பொருந்தாது.

கட்டுக்கதை : காஷ்மீர் பெண்களை பிற மாநிலத்தவர்கள் திருமணம் செய்துக்கொள்ள அதிகாரம் இல்லை?

உண்மை : காஷ்மீர் பெண்கள் பிற மாநிலத்தவர்களைத் திருமணம் செய்வதற்கு எந்தத் தடையும் இல்லை.

காஷ்மீரைச் சேர்ந்த பெண் தொழில்அதிபர் சுனந்தா புஷ்கர் வெளி மாநிலத்தைச் சேர்ந்த சசி தரூரை (இந்தியாவின் முன்னாள் மனிதவள மேன்பாட்டுத் துறை அமைச்சர்) திருமணம் செய்திருந்ததை அனைவரும் அறிவர்.
ஆனாலும் கூட பாஜகவின் முக்கிய தலைவர்களே கூட “காஷ்மீர் பெண்களை இனி யார் வேண்டுமானாலும் திருமணம் செய்யலாம் என்றும் சிவப்புத் தோல் காஷ்மீர் பெண்களைத் திருமணம் செய்ய பா.ஜ.க.இளைஞர்கள் ஆர்வமாக இருப்பதாகவும் தங்கள் வக்கிர புத்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

திருமணத்தைப் பொருத்தவரை இருக்கும் விதி என்னவென்றால் இம்மாநில பெண்கள் வெளிமாநில ஆண்களை திருமணம் செய்து கொண்டால், அப்பெண்கள் இம்மாநிலத்தில் அசையாச் சொத்துகள் வாங்க முடியாது.

ஆனால் ஆண்கள் வெளிமாநில பெண்களைத் திருமணம் செய்து கொண்டால், அவர்கள் இம்மாநிலத்தில் அசையாச் சொத்துக்களை வாங்கலாம் என்பது சட்ட விதி. ஏனெனில் “காஷ்மீரைப் பொறுத்தவரை அம்மாநிலத்தின் இயற்கை வளங்கள் , குறிப்பாக நிலங்கள் காசுமீரிகளே உரியவை என்பதால் வேறு மாநிலத்தவர் அங்குள்ள பெண்ணைத் திருமணம் செய்கையில் அந்தக் கணவருக்கு அந்தச் சொத்து போய்விடக்கூடாது என்பதால் அப்படி ஒரு விதி இருந்தது.

நிலத்தைக் காக்க வேண்டும் என்ற நோக்கம்தான் இதன் அடிப்படையாக இருந்தது.

(தொடர்வோம்)

க.இரா. தமிழரசன்

Leave a Reply