குடியுரிமைச் சட்டத் திருத்த வரைவும் அமித்ஷா சொல்லாததும்!- குமரன்.

//
Comment0

குடியுரிமைச் சட்டத் திருத்த வரைவு நேரடியாக இசுலாமியர்களை மத அடிப்படையில் பாகுபடுத்தும் நோக்கோடு கொண்டு வரப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே அசோமை மையப்படுத்தி தேசிய குடிமக்கள் பதிவேடு என்ற முறையில் 19 இலட்சம் மக்களை நாடற்றவர்களாக்கியது.

குடியுரிமைச் சட்டத் திருத்த வரைவையும் நாடு முழுக்க தேசிய குடிமக்கள் பதிவேடு முறையையும் பாஜக கொண்டு வருவதன் உண்மையான நோக்கம் என்ன?

பாஜகவின் மூலவர்களான ஆர்எஸ்எஸ் தலைவர்களின் குடியுரிமை பற்றிய கருத்துகளைத் தொகுத்தோமெனில் நாம் தெளிவான வரையறைக்கு வரமுடியும்.

கோல்வால்கர் இந்துராஷ்டிராவின் குடிமக்களாக இந்துக்கள் தான் இருக்கலாம் என்கிறார். இசுலாமியர்கள் இரண்டாம்தர குடிமக்களாக இருக்கலாம் , சலுகைகள் கோர முடியாது என தனது சிந்தனைக் கொத்து நூலில் எழுதியிருக்கிறார்.

ஆர்எஸ்எஸ் , இந்துமகாசபா அமைப்புகள் 1930 களிலிருந்தே இத்தாலி பாசிஸ்டு கொள்கையையும் , நாஜி ஜெர்மனியின் யூத வெறுப்புக் கொள்கையையும் புகழ்ந்து எழுதி வந்தனர்.

நாஜி ஜெர்மனி யூதர்களை குடியுரிமை அற்றவர்களாக மாற்றும் நோக்கில் நுரம்பர்க் சட்டங்களைக் கொண்டு வந்தது.

ஜெர்மனியின் இரத்தத்தை தூய்மைப்படுத்துவதற்காக கொண்டு வருவதாக அறிவித்தது.

கோல்வால்கர் , சவார்க்கர் போன்ற தலைவர்களின் கூற்றுப்படி பார்த்தால் இசுலாமியர்களை நாடற்றவர்களாக , இரண்டாந்தர குடிமக்களாக அறிவிப்பது தான்.

இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவே தேசிய குடிமக்கள் பதிவேடு வர இருக்கிறது . அதனுடைய தொடக்க நிலையாக இன்றைக்கு குடியுரிமைச் சட்டத் திருத்த வரைவு கொண்டுவரப்பட்டிருக்கிறது.

(நாஜி ஜெர்மனி கொண்டு வந்த Reich citizen law ஆல் குடியுரிமை பறிக்கப்பட்ட யூதர்களின் படம்)