சென்னை- மாநகரம்(மா நரகம்)- ஜெயசேகர்.

//
Comment0


இன்று தமிழ்நாடு முழுவதுமாக தண்ணீ்ர் இல்லாமல் வரண்டு காணப்படுகிறது. இதற்கு காரணமானவர்கள் இப்போது ஆளுகின்ற அதிமுக கட்சியும், இதற்கு முன்பு ஆண்ட திமுக கட்சியும், மக்களாகிய நாமும்தான்.

ஏரி, குளம், குட்டை, வாய்க்கால் போன்றவற்றை தூர்வாரமால் இருப்பதுதான் இதற்கு முதல்காரணம். பல கோடி ருபாய் செலவுசெய்யப்படுகிறது ஏரி, குளம், குட்டை, கால்வாய் போன்றவற்றை தூர்வாருவதற்கு. ஆனால் இதை எல்லாம் ஒழுங்காக செய்யாத இந்த அதிகாரிகளை ஒன்றும் செய்யாது இந்த நீதிமன்றம். ஆனால் ஹெல்மெட் போடவில்லையென்றால் வாகனத்தை பறிமுதல் செய்வதில் மட்டுமே குறியாக இருக்கிறார்கள் சட்டத்தை நிலைநாட்டுவோர்.

இரண்டாவது காரணம் மழை இல்லாதது. ஆனால் இன்று எடப்பாடி அரசு சாலை போடுவதற்காக பல ஆயிரக்கணக்கான மரங்களை அழித்து கொண்டு இருக்கிறது. ஆனால் இதற்கு எல்லாம் எத்தனை மரங்கள் நட்டு இருக்க வேண்டும். எப்படி உயிர்சேதத்தை தடுக்க ஹெல்மெட் போட வேண்டுமோ அதே போல் தான் நாம் உயிர்வாழ தண்ணீர், தூய்மையான காற்று, நல்ல நிலம் மிகவும் தேவை. ஆனால் இதற்கு நீதிமன்றம் வாய்பேசாது. இன்றய காலக்கட்டத்தில் மழையின் அளவு மிக குறைவாக காணப்படுவதால் நிலம் வறண்டு பூமியில் தண்ணீர் இல்லாமல் உலர்ந்து மனிதன் மட்டுமல்லாமல் எல்லா உயிர்களுக்கும் தண்ணீர் இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகிறது.

சென்னை மாநகரம் இன்று மா நரகமாக காட்சியளிக்கிறது. எங்குபார்த்தாலும் மக்கள் தண்ணீருக்காக குடங்களுடன் அலைந்து திரிந்து கொண்டு வருகின்றனர். இந்த அளவுக்கு மிக மோசமான தண்ணீர் பஞ்சத்தை சென்னை மாநகராட்சி பாத்திருக்க வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது . ஏரிகள் மட்டுமல்லாமல் கிணற்றில் மற்றும் ஆழ்துளை கிணற்றில் கூட தண்ணீர் இல்லாத சூழ்நிலையே காணப்படுகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட உணவுக்கூடங்களை தண்ணீர் இல்லாமல் நடத்தமுடியாத நிலையில் மூடக்கூடிய சூழல் உருவாகி இருக்கிறது. மரம் எவ்வளவு முக்கியம் என்பதை இந்த தண்ணீர் பஞ்சம் உணர்த்துமா அல்லது அரசியல்வாதிகளை மட்டுமே குறைசொல்லிவிட்டு நகருவார்களா மக்கள்?

ஏரி, குளங்களை தூர்வாராதது அரசியல்வாதிகளின் குற்றம். ஒவ்வொரு மக்களும் மரங்களை நடுவதில் ஆர்வம் காட்டியிருக்க வேண்டும். அரசியல்வாதிகளை மட்டுமே குறைசொல்லிவிட்டு தப்பமுடியாது. மக்களும் ஒருவகையில் காரணமானவர்கள்தான். எட்டு வழி சாலை போடுவது, ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் எடுப்பது அல்ல முன்னேற்றம். இனியாவது இந்த அரசுகள் இயற்கையை அழிக்காமல் அதை பாதுகாக்குமா? அல்லது இயற்கையை அழித்து ஹைட்ரோ கார்பன், மீத்தேன், அணுகழிவு மையம் பேன்ற இயற்கைக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்குமா? கேரளாவைப்போல இயற்கையை பாதுகாத்தால் மட்டுமே மழையையும், தூய்மையான காற்றையும் எதிர்பார்க்க முடியும்… நீதிமன்றங்களும், சட்டங்களும், அரசியல்வாதிகளும் மக்களுக்காக செயல்படும் நாட்கள் வருமா…இல்லை! மக்கள் ஒன்றுசேர்ந்து நல்லவர்களை தேர்ந்தெடுக்கும் காலம் வருமா? பொறுத்திருந்து பாப்போம்….

ஜெய சேகர் கருங்கல்.