ட்ராட்ஸ்கியின் மரணமும் ட்ராட்ஸ்கியத்தின் முடிவும் – தோழர் சண்முகதாசன் (பகுதி-3)

//
Comment0

சோவியத்யூனியனில் இருந்து வெளியேற்றப்பட்ட பின் ட்ரொட்ஸ்கியின் நடவடிக்கைகள் பற்றியோ சர்வதேச சோவியத் எதிர்ப்பு நடவடிக்கையின் கேந்திரமாக அவர் எப்படி மாறினார் என்பது பற்றியோ, இந்தக் கேந்திரம் அவரது ஆடம்பரங்களுக்கு எவ்வாறு பெரும் தொகை பணத்தை செலவழித்தது என்பது பற்றியோ ,அவர் இறுதியில் பெரிதும் அரண் செய்யப்பட்ட கோட்டையில் குடியேறினார் என்பது பற்றியோ ,இறுதியில் அவருடைய பெண் காரியதரிசியின் காதலனால் எவ்வாறு கொல்லப்பட்டார் என்பது பற்றியோ இங்கு விரிவாக கூறவேண்டியதில்லை .அவை அனைவரும் அறிந்த வெட்ட வெளிச்சமான விடயங்கள்.

இன்று சோசலிசத்தை ஒரு நாட்டில் கட்டியமைக்க முடியுமா என்பது போன்ற கேள்விகள் வேறு பொழுதுபோக்கற்ற அறிவுஜீவிகள்தான் அவை பற்றி விவாதிப்பார்கள். அதனைச் செய்ய முடியும் என்பதை லெனினும் ஸ்டாலினும் உலகிற்கு நிருபித்துவிட்டனர். ஆனால் 1920ம் ஆண்டுகளில் ரசியாவுக்கு உள்ளேயும் வெளியேயும் மக்களுக்கு தெளிவு இருக்கவில்லை. இதனைச் செய்ய முடியுமா என்று பலர் சந்தேகித்தனர். இவ்வாறுதான் அப்பொழுது ட்ரொக்சியவாதத்திற்கு ஒரு சமுதாய அடிப்படை இருந்தது.

ஆனால் இன்று ஒரு நாட்டில் சோசலிசத்தை கட்டியமைக்க முடியாது என்ற ட்ரொக்சியின் தத்துவம் செத்த தத்துவம். ட்ரொஸ்க்கியவாதம் என்பது தொழிலாளி வர்க்க இயக்கத்திற்கு உள்ளேயிருந்த தவறான தத்துவம் என்ற நிலைமையில் இருந்து பகிரங்கமான எதிர்ப்புரட்சித் தத்துவமாக மாறியுள்ளது. ட்ரொக்சிய வாதம் என்னும் எதிர்ப் புரட்சிகரத் தத்துவம் உயர் மத்தியதர வர்க்க அறிவுஜீவிகளுக்கு கவர்ச்சிகரமானது. ஏனென்றால் அது ஏகாதிபத்திய எதிர்ப்பு கொண்டதாக பாசாங்கு செய்கின்றது. அதேவேளையில் அதன் பிரதான பங்கும் செயல்பாடும் புரட்சிக்கு எதிரானது. தொழிலாளி வர்க்கத்திற்கு எதிரானது. சர்வதேசிய முதலாளித்துவப் பத்திரிகைகள் ட்ரொக்சியைப் பாராட்டும் அதேவேளையில் ஸ்டாலினை இன்றுவரை திட்டுவதன் அடிப்படை நோக்கத்தை ஒரு உண்மையான புரட்சியாளனால் இலகுவாக விளங்கிக் கொள்ள முடியும்.

பின்குறிப்பு.

ரசியாவில் கம்யூனிசம் தோற்றுவிட்டது என்றும், அதற்கு காரணம் ஸ்டாலின்தான் என்று புரட்டுவதுமாகவும் ,கம்யூனிச கொள்கைகளுக்காக யார் யாரெல்லாம் போராடினார்களோ,வெற்றி பெற்றார்களோ அனைவரையும் இவர்கள் கம்யூனிஸ்டுகளே அல்ல என்று தூற்றுவதுமாகவும் மட்டுமே இவர்கள் புரட்சிகரப்பணியினை ஆற்றிக்கொண்டுள்ளனர்.
முக்கியமாக லெனின் முன்வைத்ததைத்தான் டிராட்ஸ்கியும் முன்வைத்தார் என்று போலிமுகம் காட்டும் டிராட்ஸ்கியர்கள் லெனினை முன்வைக்காமல் டிராட்ஸ்கியை முன் வைப்பதற்கான காரணம்தான் என்ன?
லெனினியமும் , டிராட்ஸ்கியமும் ஒன்றல்ல. லெனினியத்திலிருந்து வெகுதூரம் விலகிய அதிதீவிர இடதுசாரி சாகச கருத்தியலே டிராட்ஸ்கியிசம். லெனின் என்கிற கவசத்தை கழட்டிவிட்டால டிராட்ஸ்கியத்தின் எதிர்புரட்சித்தன்மைகள் அம்பலமாகிவிடும் என்பதாலேயே இன்னும் அவரை பிடித்துக்கொண்டு இருக்கிறார்கள். லெனினை பின்தொடர்வோம்.போலிகளை விரட்டுவோம்.

நன்றி- தோழர் பாலன்(லண்டன்)

Leave a Reply