தமிழ்நாடு தேசிய கட்சி – கோரிக்கை விளக்கப் பொதுக்கூட்டம்

//
Comment0
தோழர் N.G.வெங்கடேசன்.

தோழர். மணி.

ஆரணி பேரூராட்சியில் வீடு இல்லா அனைத்து ஏழை மக்களுக்கும் இலவச வீட்டுமனையும் ,பசுமை வீடும் கட்டித்தரப்படவேண்டும் ,தற்போது செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையத்தை 24 மணி நேரமும் இயங்கக்கூடிய பொது மருத்துவமனையாக மாற்ற வேண்டும் , சென்னை செல்வதற்கு பேருந்திற்காக நீண்ட நேரம் காத்து நிற்கும் அவல நிலையை போக்க கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் , முழு அளவில் இயங்கக் கூடிய அனைத்து வசதிகளும் கொண்ட பேருந்து நிலையம் அமைக்கப்படவேண்டும் , இ.சேவை மையம் அமைத்து தரப்பட வேண்டும்,ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதியில் அனைத்து அடிப்படை வசதிகளையும் உடனே செய்து தர வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு தேசிய கட்சியினால் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் மஞ்சுளா , N.s.உஷா,லட்சுமி, S.பாரதி,V.விஜயா, K.வசந்தி, சாமந்தி, S.வாசு, K.சங்கர், M.பிரகாஷ், V.பிரபு, D.நாகராஜ், கார்த்திக் கிருஷ்ணன், R.S.செல்வம், R.வினோத், A.ஐயப்பன், ஏ.லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகிக்க தமிழ்நாடு தேசிய கட்சியின் ஆரணி பேரூராட்சி தலைவர் வெங்கடேசன் தலைமை வகித்தார்.

தோழர்.சா.மணிவண்ணன்.

கட்சியின் ஆரணி பேரூராட்சி செயலர் மணி கோரிக்கைகளை விளக்கி பேச , திருவள்ளூர் மாவட்ட தலைவர் சா.மணிவண்ணன் கருத்துரை ஆற்றினார்.
தமிழ்நாடு தேசிய கட்சியின் தலைவர் அ.லோகசங்கர் சிறப்புரையாற்றினார்.

பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்த உதவி செய்த அனைவருக்கும் தோழர் வாசு நன்றி தெரிவித்தார்.