தவறுகள் செய்

//
Comment0
Spread the love

உன்னைக் கண்டு
நடுநடுங்குகிறதா ஆளும்வர்க்கம்!
அப்படியெனில் மீண்டும் மீண்டும்
செய் அத்தவறை!

சிறைக்கம்பிகள் உன் சீற்றத்தை
நிறுத்தமா?
உன் விடுதலைத் தனலில்
சிதறியே போகும்!

வர்க்கம் தோன்றிய நாள் முதல்
பகையும் தோன்றியது
இப்போதுவரை மானுடம் மட்டுமே
பாய்ச்சலாய் பாய்ந்திருக்கிறது!

இலாபவேட்டையின் கணக்கை
முடி!
வர்க்கப்போரில் கடனை அடை!

அதுவரை இப்போதைக்கு நீ
செய்யும் தவறை திரும்ப செய்!

மனிதகுல விடுதலையின் முதல்
போராட்டமே தவறிலிருந்துதான்
தொடங்குகிறது!

அன்றைக்கு ஸ்பார்டகஸ் தொடங்கி
வைத்த தவறை தொடர்ந்து செய்!

தவறுகள் ஓர்நாள் போற்றப்படும்
அப்போது செவ்வானம் விடிந்திருக்கும்!

-காமராசன் மண்டகொளத்தூர்

Leave a Reply