தொழிலாளர்களை நசுக்கும் நீதிமன்றங்கள்!

தொழிலாளர்களை நசுக்கும் நீதிமன்றங்கள்! – செந்தாரகை

//
Comment0

போக்குவரத்து தொழிலாளர்கள் ஏன் இப்படியான இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டனர்.மக்களுக்கு பாதிப்பை கொடுக்க வேண்டும் என்பதோ, அவர்களை அலைக்கழிக்க வேண்டும் என்பதோ போக்குவரத்து தொழிலாளர்களின் நோக்கம் அல்ல.

அவர்களின் போராட்டம் என்பது தங்களின் வாழ்வாதாரத்தை காக்கும் போராட்டம் ஆகும்.போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கை என்ன? அவர்கள் நீதிபதிகளைப் போல,நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களை போல லட்சக்கணக்கிலா சம்பளம் கேட்கிறார்கள்.அவர்கள் கேட்பது தங்களுக்கு அடிப்படை ஊதியமாக ரூபாய் 19,500 தான் கோரினார்கள்.அதை கொடுக்கக்கூட அரசு முன் வரவில்லை.

மேலும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கும் மற்ற பொதுத்துறை தொழிலாளர்களுக்கும் இடையிலான வேறுபாட்டை குறைக்கவேண்டும்.

ஒப்பந்தப்படி பென்ஷன் மற்றும் பிஎஃப்(PF) செலுத்தப்படவேண்டும். 2003 ஏப்ரல் 1 க்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு பென்ஷன் கொடுக்கப்படவேண்டும்.

தொழிலாளர்களுக்கான ரூ7000 கோடி நிலுவைத் தொகையை செலுத்த வேண்டும். ஜனவரி முதல் அனைத்து பணப்பயன்களும் சரியாக செலுத்த வேண்டும்.

இவை தான் அவர்கள் வைத்த கோரிக்கைகள்.ஆனால் அரசு ஒழுங்காக இதற்கு செவி சாய்க்கவில்லை.ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓய்வுபெற்ற ஊழியர்கள் தங்கள் பணப்பலன்களை பெறாமலேயே இறந்துள்ளனர்.

ஆனால் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி போன்றோர் போராடும் தொழிலாளர்கள் மீதி வசை பாடுகின்றனர்.இவர் ஏற்கனவே செவிலியர் போராட்டத்தில் போராடிய செவிலியர்களை பார்த்தும் கொடுக்கிற சம்பளத்தை வாங்குங்கள் இல்லையேல் வேலையை விட்டு சென்றுவிடுங்கள் என்று கூறினார்.இன்று போக்குவரத்து தொழிலாளர்கள் விடயத்திலும் இவ்வாறு தான் ஆணவப் போக்கோடு நடந்துள்ளார்.

துப்பாக்கி குண்டுகளுக்கும்-பீரங்கி குண்டுகளுக்கும் அஞ்சாத தொழிலாளர் வர்க்கம்…இந்த அநீதிமன்றங்களுக்கா அஞ்சப்போகிறது?

உழைக்கும் மக்களின் உரிமைப் போராட்டம் வெல்லட்டும்!