பறிக்கப்படும் காஷ்மீரின் உரிமைகள்.- அபராஜிதன்

//
Comment0

காஷ்மீரை பிரிக்கும் மசோதா அமித்ஷாவால் நாடாளுமன்ற மேலவையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.


காஷ்மீர் மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக சிறப்பு அந்தஸ்து வழங்கி அரசியல் சாசனத்தில் இயற்றப்பட்டிருந்த 370, 35(A) பிரிவுகளை நீக்குவதற்கும்,ஜம்மு-காஷ்மீரை சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும்,லடாக் பகுதியை சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் பிரிப்பதற்கும் இந்த மசோதா பரிந்துரை செய்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு காஷ்மீரில் அளவுக்கு அதிகமாக ராணுவம் குவிக்கப்பட்டது.அதன் பின்னர் காஷ்மீரின் அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.அப்போதே காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்குவது பற்றியும்,காஷ்மீரை மூன்றாக பிரிப்பது பற்றியும் தகவல்கள் உலவின.

காஷ்மீரை ராணுவத்தின் அசுரப்பிடியில் நிற்கவைத்துவிட்டு அம்மாநில மக்களின் உரிமைகளை அவர்களுக்கே தெரியாமல் பறித்துக்கொண்டிருக்கும் மிகச்சிறந்த ஜனநாயக காவலர்கள்தான் மோடியும் ,அமித்ஷாவும்.

இவர்களின் இந்த நடவடிக்கை இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய இனங்களுக்கும் விடப்பட்டிருக்கிற எச்சரிக்கையாகும்.இனிமேலும் விழித்துக்கொள்ளவில்லையானால் தமிழர்களின் எதிர்காலம் கேள்விக்குறியே!

Leave a Reply