புடின் வெற்றி சொல்லும் செய்தி

புடின் வெற்றி சொல்லும் செய்தி!

//
Comment0

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது பல்வேறு நாடுகளின் கொள்கை வகுப்பாளர்களை,அரசியல் தலைவர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.குறிப்பாக ஐரோப்பிய நாடுகளை.

ஏனெனில் தற்போது ஐரோப்பா பொருளாதார நிலையில் சரிவையே சந்தித்து வருகின்றன.உக்ரைன் விடயத்திலும் புடின் தீவிரமாக உள்ளார்.இவை அனைத்தும் அவர்களை கவலையில் ஆழ்த்தக் காரணம்.பொருளாதார மற்றும் இராணுவ ரீதியாக ரஷ்யா தங்களை வீழ்த்தி விடுமோ என்றும் அஞ்சுகின்றனர்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகளில் பெருகி வரும் ரஷ்ய ஆதிக்கமும் அவர்களை அச்சப்படுத்துகிறது.சிரியாவில் ரசியாவின் தலையீடு போரின் போக்கையே மாற்றி விட்டது.

சிரியா அதிபர் அசாத் ஆட்சியை வீழ்த்த முனைந்த அமெரிக்க மற்றும் மேற்குல நாடுகள் பெருத்த பின்னடைவை சந்தித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply