பெண்களின் தியாகம் – அகசு.மணிகண்டன்.

//
Comment0

இன்று சமூக வலைதளங்களிலும் பலரின் வாய்வழி கருத்தாகவும் நாம் கேட்கின்ற,காணுகின்ற ஒன்று.
கொரானா என்னும் கொடிய வைரஸால் நமது சுதந்திரம் பறிக்கப்பட்டு ,நமது இறக்கைகளை வெட்டி , நாலு சுவற்றுக்குள் இருக்க வைத்திருப்பதால் ,ஒரு நாளை கழிப்பதே ஒரு யுகத்தை கழிப்பது போன்று வேதனையாக இருக்கின்றது.மிகவும் தனிமையில் இட்டு சென்றுவிட்டது.

என்னால் இதற்கு மேலும் முடியுமா?.இந்த சாத்திய வீட்டின் உள்ளே இருந்தபடி வெளி உலகத்தில் என்ன நிகழ்கிறது என அறியமுடியவில்லையே என்ற எண்ணமும் கூட உருவாகியுள்ளது. ஏனெனில் இந்த இடைவெளியில்லா நான்கு சுவர்களுக்கு  இடைவெளியில் உள்ள வண்ணங்களை பார்த்து பார்த்து சலிப்பு ஏற்பட்டுள்ளது என்று பல கருத்துக்கள் வந்து கொண்டேயுள்ளது.
முக்கியமான ஒன்று  இவையனைத்தும் பதிவு செய்தது ஆண்களே.
ஆம்! பெண்கள் அவ்வாறு கூற வில்லையே என்ற எண்ணம் யாருக்காவது உருவானதா? என்றால் தெரியவில்லை.

பெண்கள் இவ்வாறு புலம்பவில்லை காரணம் நாம் தான் பெண்களை அவர்களின் வாழ்நாள் முழுவதும் அந்த நான்கு சுவர்களுக்குள் அவர்களின் சுதந்திரத்தை,அவர்களின் சுயமதிப்பை,அவர்களின் அறிவை அந்த சுவற்றுக்குள் போட்டு பூட்டிவிட்டோமே.

இப்பொழுதாவது பெண்களின் நிலையை உணர்ந்து பாருங்கள். அவர்கள் எவ்வாறு தனிமையை உணர்ந்திருப்பர். எவ்வாறு தங்களை சுருக்கிக்கொண்டு விட்டனர்,உலகை பற்றிய ஆர்வமில்லாது இருக்கின்றனர், எவ்வாறு சமூகத்தை பற்றிய எண்ணங்கள் அவர்களுக்கு உருவாகியிருக்கும்?

கொரானா என்னும் வைரஸை காரணம் காட்டி அரசு நம்மை வீட்டிலேயே முடக்கிவிட்டு எப்படி அரசிடம் கையேந்தி நிற்கும் அவல நிலைக்கு தள்ளியதோ அதுபோல தான் தெய்வம்,கற்பு ,அது,இது என்று பெண்களை பல காரணம்காட்டி இந்த ஆணாதிக்க சமூகம் பெண்களை ஆண்கள் சார்ந்தே வாழும்படி செய்துவிட்டது.
கொரானவின் மீது நமக்கு வெறுப்பு ஏற்படுகிறதென்றால்,
கொரானவை போல் ஆண்கள் பெண்களை அடக்கி ஆள்வது அவர்களுக்கு ஆணின் மீது வெறுப்பு ஏற்படாதா? அப்படி வெறுப்பை உமிழ்ந்தாலும் இந்த சமுதாயம் அவர்களை பல விதத்தில்  ஒடுக்கிறது. இதற்கு ஏதும் அறியா பெண்களும் தெரியாமலேயே துணைசெல்கின்றனர்.
இந்த கொரானாவினால் தாங்கள் (ஆண்கள்) அனுபவித்திருக்கும் மனரீதியான, சுதந்திரமற்ற,சிந்தனையற்ற இன்னல்களை பெற்றோமோ  அதேபோல தான் பெண்களை  நாம் அடக்கிவைத்து அவர்களின் சுதந்திரத்தை பறித்துள்ளோம்.

இந்த சமூகத்தில் அவர்களுக்கான இடம் தேவை என்பதை உணரவேண்டும்.

காரணம் அவர்களும் நம்மை போன்றே சிந்திக்க கூடிய இரத்தமும் சதையும் உள்ள  சக மனிதர்கள்தான்.