பொறுத்திருப்போம் புவி ஆள….அஸ்வினி கலைச்செல்வன்

//
Comment0

ஐந்து நதிகளின் தீரர்கள்
தலைநகரை முற்றுகையிட்டிருக்கிறார்கள்.
ஏர்ப் படைகளின் அணிவகுப்பு
அகங்கார மாடங்களை அசைத்துக் கொண்டிருக்கிறது.

கீழைத்தேயத்திலோ
தீரத்தை தொலைத்துவிட்டவர்கள்
உள ஊன பிறழ்வின் உச்சமாய்
சீலையை உருவி ரசிக்கிறார்கள்

மத சாயம் பூசிவிட்டு பிரித்தாலும்
நாடு பிடித்தலின்
நரி தந்திரத்தில்
நாட்டமில்லா மக்களாகி போனார்கள்

ஏர்கலப்பைகளில்
சிம்மினி விளக்குகளில்
தடுப்பணைகளில் என
போராட்டக் களத்தில.
சிறு துரும்பும் பல் குத்த உதவுகிறது

ஈரோட்டு கிழவனின் மகன்களும்
மூத்திர பையோடு களத்தில் வலம் வருகிறார்கள்

மிரட்டும் காவல்துறைக்கும்
ரொட்டியும் தண்ணீரும் வார்க்கும்
தாயாகிப்போனார்கள்

சடலமாகும் போதும் கூட கடன் கட்டும்
உடல் உறுப்புக்கள் இவர்களின் நேர்மைக்கு விளக்காகும் மனிதர்களானார்கள்

சாலையில் வீடமர்த்திக்கொண்டனர்
நடுங்கும் குளிரும் காணாது நகரும் அரசும் இவர்களின் துணிவும் திமிரும் கண்டு நடுங்கித்தான் போனது

பொறுத்திருப்போம்!
புவி ஆள!

அஸ்வினி கலைச்செல்வன்

Leave a Reply