(போலி )நாட்டுப்பற்று-s.மீனா,உளவியலாளர்.

//
Comment0

வரலாற்றில் சாம்ராஜ்யங்களும்,நாடுகளும் நிரந்தரமாக நீடிப்பதில்லை.பல்வேறு காரணங்களால் மாற்றங்களுக்கு உள்ளாவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.பிரிவினைகள்,எல்லை மாற்றம் ,உருமாற்றம் என்று மாறிக்கொண்டே செல்கின்றன.

உதாரணமாக, நம் இந்தியாவே பல்வேறு முகவரிகளோடு முகலாய இந்தியாவாக, பிரிட்டிஷ் இந்தியாவாக, இப்பொழுது இந்தியாவாக தோற்றமளிக்கிறது. இதிலும் பல்வேறு மாநிலங்கள், பிரிவுகள், அமைப்புகள். மற்றும் ஒரு காலத்தில் இலங்கை, நேபாளம், பூட்டான், மாலத்தீவு, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகள் இந்தியாவுடன் இணைந்திருந்தவை என்பது வரலாறாக இருந்தாலும் இன்று உடனில்லை. இது போன்றே பல்வேறு நாடுகளும், அதன் பிரிவுகளும், வளர்ச்சியும். இப்படி இணைந்திருந்த நாடுகள் பல்வேறு நாடுகளாக பிரிவதும், பிரிந்த அந்நாடுகளின் மக்கள் தங்களின் புதிய அடையாளத்தை ஏற்று முன்னேறி செல்ல வெகு விரைவில் தயாராகிவிடுகின்றனர்.

நாம் தெரிந்துக்கொள்ள வேண்டிய உண்மை எதுவெனில்,
நாடு, மாநிலம், நகரம், கிராமம், மதம், மொழி, சட்டம், திட்டம் அனைத்தும் மனித உயிர் ஏதுவாக வாழ மனிதர்களின் அறிவால் உணரப்பட்டு, வாழ்க்கையை தரமாகவும், மகிழ்ச்சியாகயும் வாழ்வதற்கு ஏற்றாற்போல் மனிதர்களால் ஏற்படுத்தப்படுபவை , ஒரு நிர்வாக வசதிக்காக, ஒழுங்கு ஏற்படுத்த.

இன்று நாம் பல போலி அரசியல்வாதிகளையும், கட்சி தலைவர்களையும் காண முடிகிறது. எப்படியெனில், நாட்டுபற்றின் பெயரில் வன்முறையை தூண்டுவது, மொழிப்பற்றின் பெயரில் வன்முறையை தூண்டுவது, இனப்பற்றின் பெயரில் வன்முறையை தூண்டுவது, மதப்பற்றின் பெயரில் உயிர்களை பலியிடுவது என்று.

ஒரு தலைவன் மனிதர்களை விட, மனித நேயத்தை விட, இனமே, சாதியே, மதமே, நாடே பெரியது என்று பேசி ஒருவரை motivate செய்து ஆயுதமாக பயன்படுத்துவானில், ஒருவரின் உயிரை மாய்க்கவும் தூண்டுவானெனில் அவனது மனநலம் பரிசோதனைக்கு உட்ப்படுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய தேவையுடன் இருக்கிறது.

அவ்வாறு மனநல சிக்கல் உள்ள கட்சி அரசியல்வாதிகளிடம் சிக்காமல், உயிர்களின் உன்னதத்தை உணர்ந்து, வாழ்க்கையின், மனிதத்தின், அத்தியாவசிய தேவைகளை உணர்ந்து, உணர்வுகளை சரியாக கையாண்டு, அறிவுடன் கூடிய, மக்கள் நலனில் மட்டும் அக்கறை கொண்ட, மக்களை சாதியால், மதத்தால், இனத்தால் வேறுபடுத்தாத, அனைவரையும் சமமாக நடத்தி மற்றும் உள்ளடக்கி ஒரு நாட்டின் வளர்ச்சியை கொண்டுசெல்லும் தலைவனை தேர்வு செய்து அவர் பின்னாலோ, கூடவோ செல்வதில் இளைஞர்கள் தங்கள் அறிவையும், தங்களையும் செம்மைப்படுத்திக்கொண்டு தெளிந்த முடிவெடுக்க கற்று கொள்ள வேண்டும்.

s.மீனா,உளவியலாளர். சேலம்.