மகாராஷ்டிரா அரசியல் திருப்பம். பா.ஜ.க முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் மீண்டும் இராஜினாமா ! – அபராஜிதன்.

//
Comment0

சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் , காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைக்கும் என்று அனைவரும் எதிர்ப்பார்த்திருந்த சூழலில் திடீரென்று பா.ஜ.க வின் தேவேந்திர பட்னவிஸ் முதல்வராக பதவியேற்றார். அவருடன் தேசியவாத காங்கிரசின் அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார். தேசியவாத காங்கிரஸ் உடைந்தது. அவர்கள் அஜித் பவாருடன் சென்று விட்டார்கள் என்றெல்லாம் செய்தி பரப்பப்பட்டது.

அதிர்ச்சியடைந்த சரத் பவார் , உத்தவ் தாக்கரே போன்றவர்கள் உடனடியாக கூடி ஆலோசனை நடத்தினார்கள். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் தீவிர முயற்சியால் பா.ஜ. க வினால் கடத்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் துரிதமாக மீட்கப்பட்டனர். சிவசேனாவும் ,காங்கிரசும் தங்கள் பங்குக்கு தங்கள் சட்டமன்ற உறுப்பினர்களை பத்திரப்படுத்தினர்.

இறுதியாக நேற்று இரவு மும்பையில் உள்ள ஓரு விடுதியில் மூன்று கட்சிகளும் இணைந்து 162 சட்டமன்ற உறுப்பினர்களை அணிவகுக்க செய்தனர்.
இது அஜித் பவாரின் பின் ஒருவரும் இல்லை என்பதை உறுதி செய்தது. மேலும் பா.ஜ.க வின் குறுக்கு வழிகள் வெற்றியடையவில்லை என்பதும் அம்பலமானது.

நாளை பா.ஜ.க பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நிலையில் முன்னதாகவே தேவேந்திர பட்னவிஸ் பதவி விலகியிருப்பது பலப்பரீட்சைக்கான அவசியத்தை விலக்கியிருக்கிறது.

பா.ஜ.க பலம் பொருந்திய நிலையில் இருக்கும் போதே இந்துத்துவ கருத்தினை கொண்ட சிவசேனாவால் எதிர்க்கப்படுவதும் ,பா.ஜ. க வை வீழ்த்த அனைத்து தரப்பும் இணைந்து செயல்படுவதும் அரசியலில் ஓரு புதிய அத்தியாயத்தை துவக்குகிறது.

இது பா.ஜ.க வின் வீழ்ச்சிக்கான முதற்படியாக்கூட இருக்கலாம்.தீ பரவட்டும்.

அபராஜிதன்.