மாணவிகளுக்கு விடுதி(Hostel) தர மறுக்கும் சென்னை பல்கலைக்கழகத்திற்கு எதிராக போராடும் மாணவர்கள்.

//
Comment0

2019-2020 கல்வியாண்டில் பல்கலைக்கழகத்தில் இருக்கைகள் கிடைத்த முதலாமாண்டு மாணவிகளுக்கு விடுதி வசதிகள் இல்லை என்று சென்னை பல்கலைக்கழக நிர்வாகம் மறுத்திருக்கிறது.

இதைப்பற்றி முறையிட்ட மாணவ மாணவியரிடம் கட்டுமானப்பணிகள் நடந்துக்கொண்டிருக்கிறது.அதனால் நான்கு ,ஐந்து மாதங்களுக்கு மேலாகும் என்ற பொறுப்பற்ற பதிலை சொல்லியிருக்கின்றனர்.

சேர்க்கை முடிவுற்றபின் மாணவர்களுக்கு விடுதிகள் தரவேண்டியதற்கு உகந்த முறையில் விடுமுறை காலத்திலேயே பணிகளை முடித்திருக்க வேண்டும்.அப்படி முடிக்காமல் விட்டதோடு,இப்போது வகுப்புகள் துவங்கவிருக்கும் நேரத்தில் மாணவிகளுக்கு விடுதி கிடையாது என்றும் அலட்சியமாக பதில் சொல்கிறார்கள்.

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ,வடகிழக்கு மாநிலங்கள் போன்ற தூரப்பிரதேசத்தில் இருந்தும் சென்னைப்பல்கலைக்கழகத்தில் சேர்ந்திருக்கும் மாணவிகளுக்கு சென்னை பல்கலைக்கழகத்தின் இந்த பொறுப்பற்றத்தனம் கடும் இன்னலை உருவாக்கியிருக்கிறது.

இதை மாணவர்கள் பலமுறை துணைவேந்தரையும்,பதிவாளரையும் சந்தித்து பேசியும் சரியான தீர்வு கிடைக்காததால் இப்போது போராட்டத்தை துவங்கியுள்ளனர்.

Leave a Reply