லிங்காயத்துகளின் தனி மத கோரிக்கை !

லிங்காயத்துகளின் தனி மத கோரிக்கை !

//
Comment0

கர்நாடகாவில் கணிசமாக வாழும் லிங்காயத் சாதியை சேர்ந்தவர்கள் நீண்ட காலமாக தங்களை தனி மதப் பிரிவினராக அங்கீகரிக்க வேண்டும் என்று போராடி வருகின்றனர்.

தாங்கள் இந்துக்கள் இல்லை என்றும்,தங்களது கருத்தும் இந்து மதத்தின் கருத்தும் வேறு என்று அவர்கள் கூறுகின்றனர்.தற்போது கர்நாடக அரசு அவர்களின் கோரிக்கையை ஏற்று அந்த முடிவை இந்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது.இது பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

இதை எளிமையாக பா.ஜ.க தலைமையிலான இந்திய அரசு புறந்தள்ள முடியாது.ஏனெனில் கர்நாடகாவில் பா.ஜ.கவிற்கு லிங்காயத்துகள் தான் கணிசமான வாக்கு வாங்கியாகவும் உள்ளனர்.

இதை ஏற்றுக்கொண்டு விட்டால் இந்து மதம் என்பது பொய் என்றும் ஆகிவிடும்.தற்போது கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தலும் நெருங்கி வருவதால் என்ன செய்வதென்று தெரியாமல் பாரதிய ஜனதா கட்சி இடியாப்பச் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளது.

Leave a Reply