விதைபந்துகள் மரங்களை உருவாக்குமா?.- அகசு மணிகண்டன்.

//
Comment0

இன்றைய காலத்தில் இளைஞர்களிடையே மரங்களின் மீதான காதலும்,அவற்றின் பயன்களையும் அறிந்து மரங்களை வளர்க்க முன்வருகின்றனர்.

இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே இந்த மாற்றத்தை வரவேற்கின்றேன்.

ஆனால் தற்போது மக்களிடையே பரவலாக பேசப்பட்டும் ,பயன்படுத்தப்பட்டும் வருவது
“விதைபந்து” என்ற முறை.

இதனை எளிதாக பேகிற போக்கில் தூக்கி எறிந்தால் மழைக்காலம் வரும்பொழுது தானாக முளைக்க தொடங்கும் என்று கூறுகின்றனர்.

இது எந்தளவுக்கு சாத்தியம் என்பது தெரியவில்லை.

முதலில் விதைபந்து செய்முறை எப்படி என்பதை பார்த்தோமேயானால்,

கொஞ்சம் மண், கொஞ்சம் சாண எரு, இவ்விரண்டையும் சிறிதளவு நீர்சேர்த்து ஒரு உருண்டையாக வடிவமைத்து அந்த உருண்டையின் நடுவில் விதையானது வைக்கப்படுகிறது.

பின்பு நிழலில் உலர்த்தி பிறகு வெயிலில் காயவைக்கப்படுகிறது.

பின்பு அந்த விதைபந்தை நிலத்தில் எறியப்படுகிறது.

இது எளிதானது மற்றும் நாம் பாதுகாத்து வளர்க்க தேவையில்லை. நாமும் இயற்கைக்கு ஏதேனும் பயன்கள் செய்துவிட்டோம் என்ற மனதிருப்தி என இவ்வாறு மக்கள் அந்த விதைபந்தை பயன்படுத்துக்கின்றனர்.

அந்த விதைபந்தை 10₹ அல்லது 15₹ என விலைக்கும் விற்கின்றனர்.அதனை வாங்கி மக்களும் பயன்படுத்துகின்றனர்.

ஆனால் உண்மையில் விதைபந்து பயனளிக்குமா?. என்பதே எனது கேள்வி!!

காரணம்,

அந்த விதைபந்தின் நடுவில் விதையானது வைக்கப்படுகிறது.அந்த விதை பந்தை உருவாக்கும் செய்யும் பொழுது அந்த பந்தில் உள்ள ஈரத்தன்மையை விதையானது கிரகித்துக்கொண்டு விதை உயிர்ப்பித்து முளைக்க தொடங்கும்.

அப்படி முளைக்க தொடங்கிய அந்த விதையை சரியான நேரத்தில் நிலத்தில் தூக்கிஎறியாவிட்டால் முளைத்த விதையானது அந்த பந்துக்குள்ளேயே இறந்துவிடும்.

இதனால் மரமாக உருவாக வேண்டிய விதையானது மண்ணோடு மக்கிவிடும்.
லட்சக் கணக்கான விதையும் வீணாகும்.

இன்று பல லட்சக்கணக்காண விதைகளை விதைபந்துக்குள் வைக்கின்றனர் .இவ்வாறு வைப்பதால் அந்த பந்துக்குள் இருக்கின்ற விதைகளின் உயிர்கள் கேள்விக்குறியே?.

மரம் நடவேண்டும் என்ற எண்ணம் உருவானது மகிழ்ச்சியே ஆனால் அதனை சரியான முறையில் செய்கிறோமா என்பதே எனது கேள்வி?.

ஒரு மரக்கன்று நட்டாலும் சரியாக பராமரித்து வந்தால் போதும். குறைந்த பட்சம் ஐந்து வருடங்களுக்குள் மரமாகிவிடும்.

விதைபந்தை வேண்டாம் என்று சொல்லவில்லை,
மழை காலம் வந்துவிட்டது ஆளுக்கொரு மரக்கன்றை வாங்கி அதனை நட்டுவைத்தாலே போதுமானது.

விதைகளை தூக்கி எறிய வேண்டாம்.

ஆளுக்கொரு மரம் நட்டாலே போதுமானது.
குறைந்த பட்சம் ஒருவருடம் மட்டுமே நாம் அம்மரத்தினை பாதுகாப்போம்.

தினமும் ஒரு அரைமணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் செலவிட்டாலே போதுமானது.

இன்று ஒருவர் மரம் வளர்க்க 42₹ கொடுங்கள் என்று அறைகூவல் கொடுத்திருக்கிறார்.அவருக்கு கொடுக்கும் 42₹ ரூபாயை நீங்களே மரக்கன்று வாங்கி நட்டுவைக்கலாம்.உங்களுக்கும் பெருமை உங்களை பார்த்து மற்றவரும் மாறுவர்.

மரங்களை வளர்ப்போம்!!
இயற்கையை காப்போம்…

Leave a Reply