Unskilled Migration எனப்படும் தொழில்நுட்ப பணி அல்லாத பணிகளுக்கு ஐரோப்பாவில் வாய்ப்புகள் எப்படி? எவ்வாறு வருவது?
இன்றைக்கு Unskilled Migration நிறைய நடைபெறுவது போலந்து, போர்ச்சுக்கல், லிதுவேனியா, லாத்வியா, குரோஷியா, ஸ்லோவேனியா, ஹங்கேரி போன்ற ஐரோப்பிய நகரங்களில். இவ்வாறு உள் நுழைந்து அதன் பிறகு ஜெர்மனி மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளுக்கு, அல்லது இத்தாலிக்கு செல்லலாம்.
முன்பு துபாய்க்கு அல்லது சிங்கப்பூருக்கு விசிட்டர் விசாவில் சென்று வேலை தேடி, அதன் பிறகு வேளையில் சேரும் நிலையை பலரும் கேள்விப்பட்டு இருப்பீர்கள், அல்லது நீங்களே சென்று இருப்பிர்கள். அது போல ஐரோப்பாவிலும் செய்ய முடியும். ஆனால் சுவீடன் போன்ற ஸ்காண்டிநேவியன் நாடுகளில் அல்லது நெதர்லாந்து, ஜெர்மனியில் என்ட்ரி விசா எனப்படும் செங்கண் (schengen) விசாவை ரொம்ப டைட் செய்து வைத்து இருக்கிறார்கள். இந்தியாவில் இருந்து விசாவுக்கான அப்பாயின்மென்ட் எடுக்கவும் மிக கடினமான உள்ளது.
சிங்கப்பூர், துபை ஆகிய நாடுகளில் Unskilled லேபருக்கு உதாரணமாக சின்ன எலக்ட்ரிக்கல் வேலைகள், பிட்டிங், பிளம்பிங் போன்றவற்றை எளிதாக பெறலாம், ஆனால் ஐரோப்பிய நாடுகளில் எலக்டிரிக்கல் சிஸிடம் வேறு, வேறுபட்ட சர்ட்டிபிகேஷன் செய்ய வேண்டும், அதனால் இந்த துறையில் இருப்பவர்கள் கொஞ்சம் கவனமாக அணுகுவது நல்லது. அதே நேரம் டிரைவிங் போன்ற துறையில் இங்கே வந்து ஒரு ஐரோப்பிய நாட்டின் லைசென்சு எடுத்து விட்டால் போதும், வாழ்க்கை அமோகம். ஆனால் எளிதாக லைலேன்சு கிடைக்காது, முறையாக ஒட்டி காட்ட வேண்டும், விதிகளை சரியாக படித்து இருக்க வேண்டும், கொஞ்சம் ஆங்கில அறிவு இருக்க வேண்டும்.
பிரான்சு நாட்டு எம்பஸியில் விசா விண்ணப்பம் எளிதாக போட முடிகிறது, ஆனால் சிறு சந்தேகம் எழுந்தாலும் ரிஜெக்ட் செய்து விடுகிறார்கள். நான் கடந்த வருடம் வெற்றிகரமாக பல விசாக்கள் செய்து கொடுத்தாலும் இரண்டு விசா ரிஜெக்ஷன் கதைகளை சொல்கிறேன், அப்போது உங்களுக்கு எளிதாக புரியும். ஒரு நண்பர் (தொழிலதிபர்) அவருடைய அண்ணன் மகனை சுவீடன் கொண்டு வர முயன்றேன். அவர்கள் இருவருக்கும் பிரான்சு டூரிஸ்ட் விசா செய்து, எம்பஸியில் இருந்து அழைப்பு வந்தது, அந்த தம்பி எடுத்தார், அவர் சரியாக பதில் சொல்லவில்லை. அதனால் இருவரின் விசாவும் ரிஜெக்ட் செய்யப்பட்டது. இத்தனைக்கும் தம்பி உயர்கல்வி படித்தவர். (இப்போது நேரடியாக சுவிடனுக்கு கல்விக்கான விசா அப்ரூவல் ஆகி இருக்கிறது, ஆகஸ்ட் வருகிறார்)
இன்னொரு தோழியின் அக்காள் மகனை சுவீடன் கொண்டு வர முயன்றேன். அவர் நார்வேயில் இருக்கிறார், நார்வே நாட்டுக்கான சுற்றுலா விசா தான் செய்யப்பட்டது. அவருடைய அக்காவுக்கும், அந்த தம்பிக்கும். அக்காவுக்கு அனுமதி வழங்கி, அந்த தம்பி 23 வயது என்பதால் நிராகரித்து விட்டார்கள். (நீங்கள் திரும்பி செல்விர்கள் என்ற உத்திரவாதம் இல்லை என்பது காரணமாம்). இப்போது பெங்களூரில் வேலை செய்கிறார், அடுத்த ஆண்டு மீண்டும் நேரடியாக சுவீடன் விசா முயல்வதாக திட்டம்.
எளிதாக உள்ளே நுழைய தோதுவான நாடுகள் மால்டா, மற்றும் போர்ச்சுகல். ஆனால் விசா விண்ணப்பம் செய்து கிடைத்தால் தான் உண்டு. இங்கே வேலைவாய்ப்பும் மிக அதிக அளவில் உள்ளதால் போட்டி அதிகம். போர்ச்சுக்கல் நாட்டில் ஆப்பிள் பறித்தால் 1000 யூரோ சம்பளம். ஆனால் அதற்கே ஆள் கிடைக்காமல் திண்டாடுகிறது நாடு. 50000 வேலை வாய்ப்புகளுக்கு ஆள் இல்லை என்பதால் விசா விதிகளை தளர்த்த முடிவு செய்து இருக்கிறார்கள். அதனால் மற்ற நாட்டில் ஏதாவது ஒன்றில் இறங்கி அதன் பிறகு போர்ச்சுக்கல் செல்லலாம். அங்கே சென்று ஏஜெண்டுகள் மூலம் வொர்க் பர்மிட் செய்து சோஷியல் செக்யூரிட்டி நம்பர் பெறலாம். இது தான் Unskilled லேபர் ஆக உள்ளே நுழைந்து ஐரோப்பாவில் செட்டில் ஆக நான் சொல்லும் நுணுக்கம்.
அடிக்கடி தனிமடலில் தொடர்புகொள்ளும் சிலர், எனக்கு ஐரோப்பாவில் இருந்து “ஆபர் லெட்டர்” வந்து இருக்கு, இது சரியா என்று பாருங்கள் என்று அனுப்புவார்கள். அது சமீபத்தில் சிபிசிஐடி இல் சேர்த்து விடுவதாக ஒரு அரசியல் கட்சியை சேர்ந்தவர் அடித்த தப்பு தவறு லெட்டர் மாதிரி இல்லை என்றாலும், சில விஷயங்களில் எளிதாக கண்டு பிடிக்கலாம். சுவீடன் நாட்டுக்கு ஆபர் லெட்டர் கொடுத்து இருப்பான் ஆனால் அதில் யூரோவில் சம்பளம் போட்டு இருப்பான். என்னடா கையெழுத்தும் இல்ல அமவுண்டும் இல்ல இது தான் பிளாங்க் செக்கா என்பது போல கையெழுத்து, சீல் எதுவும் இருக்காது. சிலர் இதை நம்பி ஏமாந்து பணம் கட்டி தொலைக்கிறார்கள். (அல்லது அவன் பணமே வேண்டாம் என்று சொல்வான், வெறும் விசா கட்டணம் 500 யூரோ மட்டும் கட்டு என்பான், அட ரொம்ப கம்மியா இருக்கே என்று கட்டி அதையும் ஏமாந்து தொலைப்பார்கள்).
சமீபத்தில் ஒரு ஆளிடம் படித்து படித்து கிளி பிள்ளைக்கு சொல்வது போல் சொல்லியும் கேட்காமல் சண்டிகர் பஞ்சாப் மாநில அருகே உள்ள ஒரு நிறுவனத்தில் பணம் கட்டி, அங்கே நடையாக நடந்து கொண்டு இருக்கிறார். எனக்கு திரும்ப போன் அடித்த போது “நான்தான் அப்பவே சொன்னேன் இல்ல” என்று ஆறுதல் தான் சொல்ல முடிந்தது. நீங்க இப்ப ஐரோப்பாவில் வாங்கி கொடுங்க என்கிறார். நான் சொன்னபடி கேட்டு இருந்தால் சரியான ஏஜெண்டுகளை நான் அடையாளம் காட்டி இருப்பேன் என்பதை மீண்டும் சொல்லி தொடர்பை துண்டித்தேன்.
சரி ஐரோப்பாவுக்கு Unskilled லேபர் ஆக வருவதற்கு என்ன வழி. என்ன தகுதி.
– குறைந்த பட்சம் ஒரு வங்கி கணக்கு, அதை மெயிண்டெயின் செய்து இருக்க வேண்டும்.
– 10 ஆம் வகுப்பு ஆவது முடித்து இருக்க வேண்டும்.
– அடிப்படை ஆங்கில அறிவு, கொஞ்சம் பேச எழுத தெரிய வேண்டும்.
– 2-3 ஆண்டுகள் கடினமாக வேலை செய்த அனுபவம்.
– இந்தியாவில் IT கட்டி இருந்தால் மிக மிக சிறப்பு.
– 1 ஆண்டு வேலிடிட்டி உள்ள பாஸ்போர்ட்
connect@senthazalravi.com என்ற மின் அஞ்சலில் தொடர்பு கொண்டு உங்கள் கேள்விகளை கேளுங்கள். அந்த அந்த நாடுகளுக்கான ஏஜெண்டுகள் எண்கள், இன்சூரன்சு போன்ற தகவல்களை உங்களுக்கு தகுந்த மாதிரி தருகிறேன். நன்றி.