சென்னையில் ஒரு தொழிற்சாலையில் பணியாற்றும் 33 வயதுள்ள செல்லமுத்து என்ற இளைஞர் குறைந்த வயதில் தனக்கு ஏற்பட்ட சக்கரைவியாதிக்கு காரணம் தன்னுடைய உணவு பழக்கவழக்கங்கள்தான் என நம்புகிறார்.மரபணு மாற்றம் செய்யப்பட கடுகு உற்பத்தி எதிராக சென்னையில் விவசாயிகள் போராடுகிறார்கள் அதில் சில விவசாயிகளின் தொடர்பு கிடைக்கிறது.ஏற்கனவே விவசாயம் செய்யும் குடும்பத்திலிருந்து வந்ததால் விவசாயம் குறித்த அனுபவமும் அவருக்கு உண்டு விடுமுறை நாட்களில் சென்னை சுற்றியுள்ள புறநகர் கிராமப்பகுதிகளில் நவீன பூச்சிகொல்லி மருந்துகளை பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் பாரம்பரிய விதைகளை கொண்டு விவசாயம் செய்து வரும் விவசாயிகளின் தொடர்பால் அது தொடர்பான தேடல்களில் ஈடுபடுகிறார் தொடர்ந்து விதைகளை சேகரித்து இலவசமாக மற்றவர்களுக்கு வழங்குவது என ஒரு சமூக இயக்கமாக வளர்த்தெடுக்க முயல்கிறார் .
ஒரு கட்டத்தில் தனது தொழிற்சாலை பணியை விட்டுவிட்டு சொத்த ஊரில் இயற்கை விவசாயம் செய்கிறார் அதன்மூலம் மற்றவர்களும் அவரின் முயற்சியில் ஏற்படும் பலன்களை அறிந்தபின் அவருடன் சேர்ந்து பயணிக்கிறார்கள். கதை பகுதி திருத்துறைப்பூண்டி அந்த பகுதியில் முதல்முதலாக கடலை பயிர் விதைக்கப்பட்ட அனுபவம் அதற்கான விதைகள் எப்படி வந்தது என்பது குறித்த பகுதி நன்றாக இருந்தது. ஆரம்பத்தில் செல்லமுத்துவிடம் ஒருவித வெறுப்பு மனப்பான்மையுடன் பழக தொடங்கு சாம்பசிவம் காதாபாத்திரம் பிறகு அவருடன் இணைந்து பயணிப்பது, அவயம்மா என்ற கீரை விற்கும் பாட்டி, ஊரில் ரசிகர் மன்றம் என சுற்றி கொண்டிருக்கும் படித்த இளைஞர்களுக்கு விவசாயம் அது சார்ந்த மதிப்கூட்டல் பொருட்களை தயாரித்து விற்பனை செய்வது அது தொடர்பான சுய வேலைவாய்ப்புகளுக்கு வழிகாட்டுவது என சிறப்பாக இருந்தது குறிப்பாக ஊரில் குடிகாரன் என கிண்டல் செய்யப்படும் மூர்த்தியை அவரின் கலைநயம் மிக்க படைப்புகளை அறிந்து அவரை மேடையெற்றி பாராட்டும் நிகழ்வுகள் சிறப்பு.நாவலில் ஒரு இடத்தில் தற்கொலைக்கு காரணமாக பால்டாயில் உள்ளதுஎன ஒரு வரி வருகிறது அது மிகைப்படுத்தபட்டதாக தெரிகிறது.
நாவல் விவசாயத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியை தடுக்கவில்லை டிராக்டர் துவங்கி மதிப்பு கூட்டல் பொருட்களை தயாரிக்க பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் வாங்குவது என நாவலில் வருகிறது. நவீன ரக விதைகள்,பூச்சிகொல்லி மருந்துகள் மற்ற இடுபொருட்கள் என அனைத்தும் உணவையும் நிலத்தையும் நஞ்சாக்கபடுவதாகவும் இதற்கு மாற்றாக பாராம்பரிய விதைகளை பயன்படுத்துவது ,உரங்கள் ,பயிர்களை பாதுகாக்க உயிர்வேலி அமைப்பது என பழைய காலத்து விவசாய முறைகளை பயன்படுத்தி உற்பத்தி செய்ய வேண்டும் அதை செய்து வரும் விவசாயிகளின் கள அனுப்பவங்களுடன் நாவல் உள்ளது. குறிப்பாக நம்மாழ்வார் ஐயா அவர்களின் விவசாய முறைகளை பின்பற்றுபவர்கள் தொடர்பாக உள்ளது
எந்தவொரு துறையிலும் விஞ்ஞான வளர்ச்சி என்பது தடுக்க முடியாது ஒன்று .சமூக உற்பத்தி முறை உற்பத்தி சக்திகள் என்பது வளர்ந்து கொண்டும் மாறிக்கொண்டும் இருக்கும். முதலாளித்துவ சமூகத்தில் அதை மக்களுக்கானதாக மாற்றுவது என்பது சவாலான விடயம்.வெண்மை புரட்சி என்று அழைக்கப்படும் நவீன வேளாண் உற்பத்தி முறை உணவு பஞ்சங்களை நிவர்த்தி செய்தது.இயற்கை விவசாயம் என்றழைக்கப்படும் நவீன ரக விதைகள் மருந்துகள் அற்ற விவசாய உற்பத்தி முறையில் தற்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ப அதை உற்பத்தி செய்து நிவர்த்தி செய்ய முடியுமா?என்பதை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியுள்ளது.நவீன வேளாண் உற்பத்தி முறை எதனால் வந்தது அதன் சமூக பொருளாதார காரணங்கள் பற்றிய தகவல்கள் நாவலில் இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
ஒரு புறம் முதலாளித்தும் ஏற்படுத்தும் நுகர்வு காலச்சார முறையில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவு முறைகள் அதிகரித்து வருவதை காண முடிகிறது. பழைய உணவு முறைகள் தேடி செல்லும் மக்களும் இருக்கிறார்கள்.ஒட்டுமொத்தமாக நவீன வேளாண் முறையை புறக்கணிப்பது சாத்தியமா என்பது ஆய்வுகுட்பட்டது .அதில் இயற்கை விவசாயம் முறைக்கு சாதகமான அம்சங்களை ஆராய்வது வேளாண் சார்ந்த படிப்புகளில் இயற்கை விவசாயம் தொடர்பான பிரிவுகள் உள்ளனவா என பல்வேறு விடயங்கள் குறித்து விவாதங்கள் நடைபெற வேண்டும். விவசாயம் முறை சார்ந்து புதிதாக படிப்பவர்களுக்கும் இயற்கை விவசாயம் செய்ய விரும்புபவர்களுக்கும் இந்த நாவல் பயனுள்ளதாக இருக்கும் தேடலை உருவாக்கும். நாவலின் ஆசிரியர் தோழர் வானவன் அவர்கள் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார் அவருடைய விவசாயம் மற்றும் சூழலியல் சார்ந்த தேடலும் அனுபவமும் தான் இந்த ஒரக்குழி என்ற நாவல் தோழருக்கு வாழ்த்துக்கள்.
-நே . ராம்பிரபு