தந்தை பெரியார் மீதான அவதூறு – வெறும் அரசியல் அவதூறு என்று ஒதுங்கி இருக்க முடியாது !
அது ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை , பெண்களின் முன்னேற்றத்தை , பிற்படுத்த பட்ட மக்களின் நலனை, இவர்கள் அனைவரின் கல்வி, சமூக நலன் ஆகியவற்றின் காலவனாக திகழ்பவர் ஒருவரை அவதூறு வழியாக அழிப்பதன் மூலம், அவர் வென்றெடுத்த சமூக நீதி, சமவாய்ப்பு முறையை தகர்க்கும் சதி !
முல்லை பெரியாறு அணையினை கட்டி , தென் தமிழகத்தின் பாசனத்தை உயர்த்தி , அம்மக்களை மேம்படுத்திய பென்னி குயிக் அவர்களுக்கு சிலை எழுப்பி, விழா எடுத்து நன்றியோடு இருக்கும் மக்கள் உள்ள ஊர் இது. அவர் பிரிட்டிஷ் காரர் என்று பார்க்காமல் அவர் செயல், அதன் விளைவு இதை மட்டும் கருத்தில் கொண்டு பாராட்டி கொண்டாடும் மக்கள் தமிழ்நாடு மக்கள். தமிழ் சமூக நலனுக்காக செயலாற்றியவர்களை தம் உயிராக கருதுபவர்கள் தமிழர்கள் !
அப்படிப்பட்ட மேம்பட்ட மக்கள் உள்ள இடத்தில், இச்சமூகத்தில் உள்ள சாதி ஏற்ற தாழ்வுகளை, அடக்கு முறைகளை, பெண் அடிமை தனத்தை போக்க தன் வாழ் நாளெல்லாம் உழைத்த தந்தை பெரியார் அவர்களை மொழி அடிப்படையில் சிறுமை படுத்த எண்ணி, அதில் தோற்று போன பின் தனி நபர் தாக்குதலில் இறங்கி உள்ளநபர்கள் ஆபத்தானவர்கள். எளிய ஆரியத்தின் பிள்ளைகள் !
எப்போது ஒருவர் செய்த செயல், அதன் காரணமாக நிகழ்ந்த சமூக மாற்றத்தை பார்க்காமல் , அவரின் மொழி , ஜாதி அடிப்படையில் அவரை அணுகுவது, பிரிவினையை தூண்டி , மக்களை மோதவிடும் வலது சாரிகளின் அணுகுமுறை. அதை சரியாக செய்து கொண்டு இருக்கிறார் சீமான் !
அடிப்படை மரியாதை, மாண்பு, அறிவு , உபசரிப்பு , நாகரீகம் இவைதான் தமிழர்களின் பண்புகளாக உலகம் முழுவதும் அறியப்படுகின்றன.
அப்படி இருக்கையில், இவற்றுள் ஒன்று கூட சற்றும் இல்லாத ஒரு நபர் எப்படி தன்னை தமிழராக அடையாளப்படுத்தி கொள்ள முடியும் ? தலைவனாக முடியும் ? அத்தகைய நபர்கள் தமிழினத்தின் அவமானம் !
சீமான் ஒரு நல்ல கதை சொல்லி ! அதை அவர் திரை துறையோடு நிறுத்தி கொண்டு இருக்க வேண்டும்.
ஆமையில் சவாரி செய்தேன் , கரும்புலிகள் உயிரை மாய்த்து கொள்ள தயாராக இருந்த நேரத்தில் அறுசுவை விருந்து உண்டேன், ஒரே ஒரு முறை 5 நிமிடம் பார்த்தவரை உடனே நம்பி தன் வாரிசாக பொறுப்பு கொடுக்கும் அவசர புத்தி காரராக பிரபாகரனை சித்தரித்தது, என உங்கள் மாலை நேர கதைகள் அறிவுள்ள தமிழ் சமூகம் என்றோ புறந்தள்ளி விட்டது !
போர் சூழலில் எப்படி விருந்துண்ண முடியும் ? இட்லி கரி, உடும்பு பொரியல் என உணவில் புதுமை செய்யும் நேரம் பிரபாகரனுக்கு இருந்ததா ? உங்களை உயர்த்துகொள்ள, பிரபாகரனை உணவு பிரியராக, பொறுப்பு இல்லாதவராக காட்டாதீர்கள். என எவரேனும் ஒருவர் உங்களை கேட்டாலும் அவரை நீங்கள் கட்சில் இருந்து விலக்கி இருப்பீர்கள் என்பது அனைவரும் அறிந்தது !
தமிழ் நாட்டில் வாழ்ந்து, தமிழ் மொழியை பேசி , தமிழக மக்களுக்காக போராட்டங்களை முன்னெடுத்து, சிறை சென்று, சாதி இழுவுகளை அகற்ற, பெண் அடிமை தனத்தை போக்க, கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்திய , தமிழ் நாட்டிலேயே இறந்தும் போன, கண் முன் கண்ட தந்தை பெரியார் அவர்களையே இழுவு செய்யும் சீமான் ,
தமிழ் நாட்டில் வாழாத, தமிழ் மொழி பேசாத ஆனால் தன் அற்பணிப்புகளால் இந்திய மக்களின் மனங்களில், வாழ்வில் , சமூக நீதியை ஏற்படுத்திய பாபா சாகேப் அம்பேத்கர் அவர்களை மராட்டியர் , அவர் நமக்கு தேவை இல்லை என பேச அதிக காலம் ஆகாது என்பதை அம்பேத்கரிய வாதிகள் உணர வேண்டும் !
தந்தை பெரியாரும் , அண்ணல் அம்பேத்கரும் எளிய, விளிம்பு நிலை மக்களின் பார்வையை சமத்துவம் , சமூக நீதி என்ற இலக்கினை நோக்கிய உலகினை காண்பதற்கான இரு கண்கள் !
அவற்றில் ஒன்றை ஆக்கிரமிக்கவும், இன்னொன்றை சேதப்படுத்தவும் ஆரம்பித்து இருக்கின்ற நபர்களை புறந்தள்ளி, அவர்களின் சமூக விரோத, பிரிவினை வாத செயல்களுக்கு சட்ட ரீதியான , உரிய தண்டனையை பெற்று தர நடவடிக்கைகள் எடுக்க வேண்டுவது அவசியம் !
அரசியல் மான்போடு இருந்த தமிழ்நாடு, சில சுயநல வாதிகளினால், attention seeker களால் , சபை நாகரிகம் கருதி தவிர்க்க பட வேண்டிய வார்த்தைகள், பிறர் முகம் சுழிக்கும் வார்த்தைகள் தற்போது சாதரணமாக பேசப்படுகிறது.
அத்தகைய கயவர்களுகு உரிய தண்டனையை பெற்று தருவதன் மூலம்,
மீண்டும் அந்த மாண்பை , நாகரீகத்தை, மரியாதையை மீட்டு எடுப்போம் ! ஏனெனில் தமிழ் நாகரீகம் நமக்கு அதை தான் கற்பித்து உள்ளது !
குறிப்பு : தந்தை பெரியாருக்கு இழுக்கு எனில் அதை கண்டிக்க அரசியல் இயக்கமாக தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, அவர் தம் போராட்டங்களால் பலன் பெற்ற ஒரு சாதாரண, சுய மரியாதை உள்ள ஒரு நபராக இருந்தாலே போதும் !
தந்தை பெரியார் புகழ் ஓங்குக !
தமிழ் வாழ்க !
KennithRaj Anbu
Robotics & AI Specialist.