பெரியார் கண்டெடுத்த பகுத்தறிவு அறிஞர் !
பெரியாரோடு பயணித்த காலம்
தன் வாழ்வின் வசந்தம் என்றவர்
இரண்டு ஆண்டுகள் ஆட்சியில்
வரலாறு படைத்தவர்
பெரியார் போற்றிய சுயமரியாதை
திருமணச் சட்டத்தை நிறைவேற்றியவர்!
தமிழர்கள் வாழும் மாநிலத்திற்குத்
தமிழ்நாடு என்று பெயரிட்டுப்
பெருமை சேர்த்தவர்!
தந்தை பெரியாரின் பிறந்த நாள்
விழாவில் முதலமைச்சர் அண்ணா ஆற்றிய சொற்பொழிவில்
நினைவு கூர வேண்டிய சில வைர வரிகளைக் காண்போம்.
“பெரியாருடைய குடும்பத்தின்
நிலை எப்படிப்பட்டது?
எந்தப் பக்கம் திரும்பினாலும்
வாணிபத்தில் ஆதாயம்;
நிலப்புலன்கள்; வீடு வாசல்கள்.
இவை எல்லாவற்றையும் பார்த்து
‘இவை எனக்குத் தேவையில்லை ‘
என்றார்.
என் நாட்டு மக்களுக்கு – நல்லது கெட்டது ஆராய்ந்து பார்க்கும் பக்குவம் அற்றுப் போயிருக்கும்
மக்களுக்கு — வேறு ஒரு செல்வத்தைத் தருவேன்;
அறிவு செல்வத்தைத் தரப் போகிறேன்; சிந்தனைச் செல்வத்தைத் தரப் போகிறேன்;
அதைத் தடுப்பார் எவரேனும் குறுக்கிடுவார்களானால்
அவர்களுடைய ஆற்றல்களையும் முறியடிப்பேன்
.இதுதான் என்னுடைய வாழ்க்கையின் குறிக்கோள்” என்று அவர்கள் கிளம்பினார்கள்.
அது தான் வாழ்க்கையின் முதல் போராட்டத்தில் அவர்கள் பெற்ற வெற்றி…
” எந்த நாட்டிலும் இரண்டு நூற்றாண்டுகளில் செய்து முடிக்கக்கூடிய காரியங்களை இருபதே ஆண்டுகளில் செய்து முடித்திருக்கிறார்கள்.”…
அவர்களால் ஏற்படுத்தப்பட்ட அறிவுப் புரட்சி சுலபத்தில் நிற்கப்போவதில்லை.
அது போகவேண்டிய தூரத்துக்குப்
போய் அடையவேண்டிய சக்தியை, இலக்கைத் தொட்டுத்தான் நிற்கும்….
பெரியார் அவர்களிடத்தில் இருந்து பிறந்த அறிவுக்கணை, எந்த இலட்சியத்தை அடைய வேண்டுமோ அதையடைந்தே தீரும்.
அதில் ஐயம் யாருக்கும் இல்லை;
அதில் கால அட்டவணையைக் கூட நாம் கருதத் தேவையில்லை. அந்தப் பாதையிலே நாம் நடைபோட்டுக் கொண்டிருக்கிறோம்.”
அண்ணாவின்
அறிவு சார்ந்த கணிப்பு!
பெரியாரின் பயணம் தொடர்கிறது.
ஆரியக் கூத்தாடிகள்
பணம்- பிணந்தின்னும் அகோரியைப்
பெரியாருக்கு எதிராகத் தூண்டுகிறார்கள்.
இருட்டில் திருட்டுக் கணக்கு எழுதும்
மயிலை புரட்டுக் குரு அற்ப மகிழ்ச்சி
அடையலாம்.
அண்ணா கூறிய கருத்து வென்று வருகிறது .
பெரியாரிய அம்பேத்கரிய
இளைஞர் படை திரள்கிறது.
வாலறுந்த குள்ள நரியின்
கொட்டம் அடக்கப்படும்
சனாதனச் சதிக்கிடங்கு
தூள் தூளாக நொறுக்கப்படும்.
பேராசிரியர்.மு.நாகநாதன்