நாம் தமிழர் துவங்கப்பட்ட காலகட்டத்தில் சீமானுக்கு அடுத்த பொறுப்பில் இருந்தவன் நான்
என் பெயர் சிபிச்சந்தர் திரைப்பட இயக்குனர்
நாம் தமிழர் கட்சி உருவாவதற்கு மிக முக்கிய காரணிகளாக இருந்தவர்களின் நானும் ஒருவன் என்பதை நிரூபிக்கவே இந்த புகைப்பட ஆதாரம் இன்னும் இதுபோல் ஆதாரங்கள் என் சேமிப்பில் இருக்கிறது அவசியம் என்கிறபோது வெளியிடுவேன்
சரி விசயத்திற்கு வருகிறேன் …
ஈழப்படுகொலைகளை நிறுத்தக்கோரி திரைப்பட அமைப்புக்கள் அனைவரும் சேர்ந்து
இயக்குனர் பாரதிராஜா தலைமையில் ராமேஸ்வரத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது அக் கூட்டத்தில் பேசிய சீமானின் ஈழ ஆதரவு பேச்சு சன் தொலைக்காட்சியால் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்படதன் விளைவு சீமானுக்கு விளம்பர வெளிச்சமும் ஆதரவும் கிடைத்தது அந்த ஆதரவை வைத்துக்கொண்டு நாம் தமிழர் என்ற கட்சி உருவாதற்கான திட்டம் வகுக்கப்பட்டது …
அதன் பின்னர் ராமேஸ்வரத்தில் சீமான் பேசிய பேச்சு இந்திய இறையாண்மைக்கு எதிராக இருக்கிறது என்று கைது செய்யப்பட்டார் அவர் சிறையில் இருக்கும்போது அவரை விடுதலை செய்யக்க்கோரி தமிழ்நாடு மற்றும் மும்பை வரை சுமார் 67 கூட்டங்களில் முழங்கியவன் நான் …..இதற்கு சாட்சி திரு மதுரை வெற்றிக்குமரனும் மும்பை அர்ஜூனும் மறைந்த மும்பை ராஜேந்திரனும்
சீமான் விடுதலையாகி வெளியே வருகிறார் சீமானை தலைவராக கொண்டு நாம் தமிழர் கட்சியை உருவாக்குவது என்று முடிவெடுக்கப்பட்டது இதில் இயக்குனர் மணிவண்ணண் பாதர் ஜெகத் கஸ்பார் போன்றவர்களுக்கு உடன்பாடில்லை என்பதால் சற்றே விலகி நின்றனனர்
கட்சியின் முதல் மாநாடு மதுரையில் ஒருங்கிணைக்கபட்டது மாநாட்டின் மேடையில் நான்( சிபிச்சந்தர் ) தங்கர் பாச்சன் தமிழருவி மணியன் ஆகியோர் முன்னிலையில் இருந்தோம்
மாநாட்டை ஒருங்கிணைக்கும் பணியை புதுக்கோட்டை முத்துக்குமார் மதுரை வெற்றிக்குமரன் மணி செந்தில் அண்ணண் நல்லதுரை சென்னை அதியமான் காரைக்குடி மைக்கேல் மற்றும் தோழர்கள் முன்னின்று மாநாட்டு பணிகளை செவ்வனே செய்து தந்தனர் மாநாடு மாபெரும் வரவேற்பை பெற்றது …
தமிழக இளைஞர்கள் அலை அலையாய் நாம் தமிழரில் இணைந்தனர் ஆனால் சீமானின் நடவடிக்கைகளில் ஒரு மாற்றம் இருப்பதை என்னால் உணர முடிந்தது அவரது பேச்சில் நடவடிகைகளில் கொள்கைகளில் மாற்றம் இருப்பதை உண்ர்ந்த நான் ஏன் இந்த மாற்றம் என சிந்திக்க துவங்கினேன் …..பொதுவாக சிறை வாழ்க்கை என்பது ஒரு மனிதனுக்கான டர்னிங் பாயிண்டாக இருக்க வாய்ப்பிருக்கிறது என்று சிந்தித்த நான் …
சிறையில் சீமான் இருந்தபோது அவரை சந்திக்க வந்த நபர்களின் பட்டியலை சேகரித்தேன் அதில் பெரியாரிஸ்ட்டுகள் மற்றும் விசிக மதிமுக மற்றும் தமிழ் ஈழத்தின் பால் அக்கறை கொண்டவர்கள் மற்றும் திரைப்படத்துறையை சார்ந்த இயக்குனர் பாலா கவிஞர் முத்துக்குமார் உள்ளிட்ட திரைப்படத்துறையை சார்ந்தவர்களை அல்லாமல் ஏழு பேரின் பெயர் அதில் இருந்தது அவர்கள் யார் என்று விசாரித்தபொழுது அவர்கள் யாவருமே ஆடிட்டர் குருமூர்த்தியால் அனுப்பப்பட்டவர்கள் என்பது உறுதியான நிலையில்
மெல்ல மெல்ல நான் நாம் தமிழரில் இருந்து விலக திட்டமிட்டேன் …
இந்த நிலையில் சென்னை ஈ சி ஆர் ல்
கோக்கனட் ரிசார்ட்டில் ஒரு மீட்டிங்க ஒருங்கிணைக்கப்பட்டது அதற்கு சீமானோடு உடன் சென்றவன் நான் ….எனக்கு என்ன மீட்டிங்க் என்று தெரியாது சீமான் அறைக்குள் செல்ல நான் வெளியே காத்திருந்தேன் …..
காத்திருந்தவர்கள் அனைவரும் பார்ப்பணர்கள் என்பதை என்னால் தெரிந்து கொள்ள முடிந்தது சுதாரித்துக்கொண்டு என்ன நடக்கிறது அதை எப்படி தெரிந்துகொள்வது என்ற ஆர்வத்தில் ஒரு வழியை கண்டுபிடித்து அந்த உரையாடலை கேட்டும் விட்டேன்
அன்று சீமானுக்கு கொடுக்கபட்ட செயல் திட்டம்
ஈழ ஆதரவு என்ற வகையில் மற்ற எவரையும் விட சீமான் மட்டுமே முதன்மையானவர் என்பதை நிரூபிக்க செயல் திட்டம் வகுத்து செயல்பட வேண்டும்
அதில் சந்தேகமே வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் அதை நிரூபித்த பின் பிரபாகரன் பெரிய வீரன் என்ற பிம்பத்தை உடைக்க வேண்டும் ஈழ விடுதலை என்ற இலக்கை நினைக்கவே அச்சப்பட வேண்டும் என்ற நிலையை உருவாக்க வேண்டும் இது ஒரு அஜெண்டா
அடுத்து பெரியாரை உயர்த்தி பேசிக்கொண்டே இருந்தால்தான் பெரியாரிஸ்ட்டுக்களின் எதிர்ப்பை சம்பாதிக்காமல் இருக்க முடியும் சந்தர்ப்பம் வரும்போது பெரியார் என்கிற பிம்பத்தை தகர்க்க வேண்டும் …
பெரியாரை தகர்ப்பதற்கான வழிமுறைகள் ..
வா உ சிதம்பரனார் முத்துராமலிங்க தேவர்
நாவலர் சோமசுந்தரபாரதியார் கி ஆ பெ விசுவநாதம் ஆதித்தானர் வள்ளலார் வைகுந்தர் இவர்கள் எல்லாம் தமிழர் அடையாளத்தோடு போராடினர்கள் ஏன் பெரியாரை மட்டும் கொண்டாட வேண்டும் என்ற மனநிலையை உருவாக்குவது பெரியாரையும் இவர்களையும் நேர் எதிராக நிறுத்த வேண்டும் என்பதும்
அதற்கு பலன் கிடைக்கும் படசத்தில் …
பெரியாருக்கு எதிராக நிறுத்தப்பட்ட தலைவர்களின்
சுய ஒழுக்கஙகளை பிரச்சாரம் செய்து அவர்களின் அடையாளங்களையும் ஒழிக்க வேண்டும் என்பதும் …
திராவிட பிம்பங்களும் தமிழ் தேசிய பிம்பங்களும் உடைபட்ட நிலை உருவானதற்கு பின் …
ராஜாஜி சத்தியமூர்த்தி போன்ற ஆரிய பார்ப்பணர்களே தமிழ் நாட்டின் மொழி கலாச்சாரம் பண்பாடு போன்றவைகள் நிலைத்து நிற்பதற்கான காரணிகள் என்பதை நிலை நிறுத்துவதும் அதன் மூலம்
இந்தி திணிப்பு வடக்கு ஆதிக்கம் போனற ஆதிக்க சுரண்டலையும் மேலாதிக்க அதிகாரத்தையும் பார்ப்பணிய கோட்பாடுகளையும் நிலை நிறுத்தி ..
பார்ப்பணர்களை தவிர மற்ற அனைவரும் மிலேச்சர்கள் அடிமைகள் பார்ப்பணர்களுக்கு சேவை செய்ய பிறந்தவர்கள் என்ற எண்ணத்தை நிலை நிறுத்துவது இதுதான் பார்ப்பணர்கள் சீமானுக்கு கொடுத்த செயல் திட்டம் அஜெண்ட்டா ….
ஆக திராவிட கொள்கைகளையும் தமிழ் தேசிய கோட்பாடுகளையும் சிதைத்து பார்ப்பணிய மேலாதிக்க கோட்பாட்டை தமிழ் நாட்டில் நிறுவதற்காக ஆர் எஸ் எஸ் கும்பலால் உருவாக்கப்பட்டவனே சீமான் ..
என்பதை உணர்ந்து கொண்ட நான் ….நாம் தமிழலிருந்து வெளியேறினேன் காலம் கடந்து போனாலும் இன்றும் வெளியேறும் படலம் தொடர்கிறது என்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன் …
ஆக நாம் தமிழர் என்பதும் சீமானும் பார்ப்பணிய பனியா கும்பலால் ஆட்டுவிக்கப்படும் ஒரு பேராபத்து என்பதை அனைவரும் உண்ர்ந்து கொள்ள வேண்டும் என்பதே இந்த பதிவின் நோக்கம் …
குறிப்பு – 2010 ஆண்டே சீமான் ஆரிய பார்ப்பணர்களின் கை பொம்மையாகிவிட்டான் என்று நான் கூறியபோது என்னை எள்ளி நகையாடிய அனைவரும் தற்போது திமுக போன்ற கட்சிகளில் இருக்கிறார்கள்
உங்களால் எப்படி அண்ணா அன்றே கணிக்க முடிந்தது என்று கேட்கிறார்கள் …
தற்போது சீமான் பேசுவதற்கும் அவனின் கீழ்த்தரமான செய்கைகளுக்கு விசிலடிக்கும் தம்பிமார்களே
அவன் உங்களை தவறாக வழி நடத்துகிறான் என்பதை ஆராய்ந்து புரிந்துகொண்டு உங்களையும் நம் தமிழினத்தையும் ஆரிய பார்ப்பணிய கும்பலிடமிருந்தும் சீமானிடமிருந்தும் காப்பாற்றிக்கொள்ள இப்போதே முடிவெடுங்கள் …நன்றி
இயக்குனர் சிபிசந்தர்