

மாணவிகள் மீதான அடக்குமுறைகளை எதிர்த்து சென்னை பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டம்.

சென்னை பல்கலைக்கழக மாணவியர் விடுதியில் மாணவிகள் மீதான தொடர் அடக்குமுறைகள்( நேரக்கட்டுப்பாடு, மேலாளர்கள் மாணவிகளை மிரட்டுதல்), தரமற்ற உணவு வழங்கியதால் மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப்படுத்துதல், விடுதியை சுற்றி புதர்கள் காடு போல வளர்ந்து நிற்பதை சுத்தம் செய்ய கோருவதை அலட்சியப்படுத்தி மாணவிகள் பாதுகாப்பினை புறந்தள்ளுதல், மாணவியர்கள் விடுதிக்கு அருகில் பாலியல் தொழில் நடப்பதை கண்டுக்கொள்ளாமல் விடுதல், விடுதிக்கு ஒதுக்கப்படும் நிதி முறைகேடுகள் போன்றவற்றை எதிர்த்து சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் போராடி வருகின்றனர். சென்னை பல்கலைக்கழக பதிவாளருடன் மாணவர் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

மாணவி கௌசல்யா தலைமையேற்று இந்த போராட்டத்தை நடத்தி கொண்டிருக்கிறார்