
“சாதிவெறியனாகவும், இந்துத்துவ சங்கிகளின் கொத்தடிமையாகவும் அண்ணாமலையின் அடிவருடியாகவும் வலம் வரும் திருமாறன்ஜியுடன் சீமான் நிற்பது, ஏர்போர்ட் மூர்த்தி நிற்பது பெரிய விசயமல்ல. ஆனால், தோழர். பெ.ம. அந்த மேடையில் நிற்கும் அளவுக்கு போக வேண்டிய தேவை என்ன? என்று நாம் கேள்வி எழுப்பியதற்கு மாற்றுக் கருத்தை தோழர் நடவரசன் அமிர்தம் முன் வைத்துள்ளார். அது குறித்து சில விளக்கங்களை முன்வைக்கிறேன்.
கேள்வி 1 :” இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தது நாம் தமிழர் கட்சி. அவர்கள் மட்டுமே யாரை அழைப்பது, யாரைத் தவிர்ப்பது என்பதை தீர்மானிக்க உரிமை உள்ளவர்கள். தோழர் பெ.மணியரசன் விருப்பப்படி நிகழ்த்த முடியாது”
நமது பதில் : தோழர்.பெ.ம விருப்பப்படி நிகழ்வை நடத்த முடியாது என்று நமக்குத் தெரியும். ஆனால், அந்நிகழ்வில் தோழர் கலந்து கொள்ளாமல் தவிர்த்திருக்க வேண்டும் என்று தான் நாம் கூறுகிறோம்.
ஏனெனில், திருப்பரங்குன்றத்தில் சங்கிக் கும்பல் இந்து – முஸ்லீம் கலவரத்தை நடத்துவதற்கு இப்போது வரை திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. மதுரையில் இருக்கும் பல்வேறு இயக்கத் தோழர்கள் இணைந்து மத நல்லிணக்க கூட்டமைப்பை உருவாக்கி மதக்கலவரம் உருவாகி விடக் கூடாது என்று தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறார்கள், அந்தக் கூட்டமைப்பில் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர்களும் இருக்கிறார்கள். அங்கு கலவரத்தை நடத்த வேண்டும் என்று வன்மத்தோடு திரிகிறது சங்கிக் கும்பல் அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பவன் இந்தத் திருமாறன். சங்கிகளுக்கு தான் சார்ந்த சமூகத்து ஆட்களை பணத்திற்காக அடியாளாக அனுப்பி வைக்கும் வேலையை செய்கிறான். பல மேடைகளில் இஸ்லாமியர்கள் மீது வன்மத்தைக் கக்கிக் கொண்டிருக்கிறான்.
மீண்டும் மோடி பிரதமராக வர வேண்டும் என்று யாகம் நடத்தி தனது ராஜ விசுவாசத்தை காட்டியவன். அண்ணாமலை நடத்திய ‘என் மண், என் மக்கள்’ நடைபயணத்தின் பாதுகாவலனாக வலம் வந்தவன். அண்ணாமலை எடுபிடியாக, சங்கிகளின் வேலைத்திட்டத்தை தென் தமிழகத்தில் கொண்டு செல்லும் சங்கியாக உலா வருகிறான்.
இந்து சனாதனத்தை இந்த மண்ணில் உருவாக்குவேன் என்று ஒவ்வொரு மேடையிலும் பேசுகிறான். இந்தத் திருமாறன் செயலுக்கு எதிராக ஒரு பக்கம் தோழர் பெ.ம வின் அமைப்பு போராடுவதும் அதே திருமாறனோடு அதன் தலைவர் மேடையைப் பகிர்ந்து கொள்வதும் எந்த வகையில் சரி. ? என்று தான் நாம் கேட்கிறோம்.
இது திருமாறனுக்கு ஊக்கத்தை தராதா? நாளை கோகுல்ராஜ் கொலை வழக்கு குற்றவாளி யுவராஜ் இருக்கும் மேடையில் நாம் ஏறலாமா? அண்ணாமலையும் தான் பஞ்சமி நிலம் மீட்க வேண்டும் என்கிறார், அவரோடும் மேடையைப் பகிர்ந்து கொள்ளலாமா? உண்மையில் பஞ்சமி நிலத்திற்காக பொதுவுடமை இயக்கங்களைத் தான் அழைத்திருக்க வேண்டும், ஏன் அவர்கள் அழைக்கப்படவில்லை? ஏன் சீமான் மேடைகளில் சாதி, மதவெறியர்கள் அழைக்கப்படுகிறார்கள். சீமானுக்கு கொடுக்கப்பட்ட வேலையை அவர் செய்கிறார், அந்தப் பட்டியலில் தோழர்.பெ.ம. ஏன் இருக்கிறார் ? அவ்வளவு தான் நமது கேள்வி.
(தொடரும்)