அநுர குமார திசாநாயக்கவின் ஆட்சி இடதுசாரிகளின் ஆட்சியா?

அநுர குமார திசாநாயக்கவின் ஆட்சி இடதுசாரிகளின் அங்கமாக  இருப்பதை விட  நிலவுகின்ற முதலாளித்துவ ஆட்சி  முறைமையின் ஒரு பகுதியே..

இலங்கையின் வரலாற்றில்  பெயரளவில் தன்னை மார்க்சிஸ்ட் தலைவர்  என்று சொல்லிக் கொள்ளும் ஒருவர் பெற்ற முதல் வெற்றியாக அனுரகுமார திஸாநாயக்கவின்  வெற்றி கொண்டாடப்படுகிறது.

வெற்றி பெற கட்டாயமாக பெற வேண்டிய  50 சதவீதத்திற்கு மேலான வாக்குகளை முதல் சுற்றில்    திசாநாயக்கவால் பெற முடியவில்லை .2 வது  சுற்று விருப்ப வாக்குகளின் அடிப்படையிலேயே அவரால் வெற்றியை பெற முடிந்தது.

இலங்கை தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக இம்முறையில் ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
இதன் மூலம் இன்று இலங்கை எதிர்கொள்ளும் தீவிர அரசியல் நெருக்கடியினை   வெளிப்படையாக நாம் உணர முடிகிறது .

நிச்சயமாக பாரம்பரிய வலதுசாரி மற்றும் நவதாராளவாதக் கட்சிகள் மீதான  இலங்கை மக்களின் வெறுப்பே
திசாநாயக்காவை வெற்றி பெறச் செய்தது. 
ஜனாதிபதி பதவிக்கான பிரதான போட்டியாளர்களான நடப்பு ஜனாதிபதியாக இருந்த ரணில் விக்கிரமசிங்க மற்றும் நாமல்  ராஜபட்ச   முறையே 17% மற்றும் 2.5% வாக்குகள் மட்டுமே பெற்றனர்.

தொடர்ந்து மக்கள் சந்தித்து வரும் அனைத்து நெருக்கடிகளையும்  எதிரத்து மக்கள் எழுச்சி ஏற்பட்டது .வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த  அரகலய( போராட்டம் என்பதற்கான சிங்கள வார்த்தை)    2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி கொழும்பு – காலி முகத்திடலில்  பல்லாயிரக்கணக்கான மக்களின் தன்னெழுச்சியுடன் தொடங்கியது.

  இலங்கை அரசை எதிர்த்த தனித்துவமான அரசியல்-பண்பாட்டு  நடவடிக்கையாக இந்த எழுச்சி அமைந்தது .  இதில் புரட்சிகரச் சக்திகள் தெளிவான கார்ப்பரேட் எதிர்ப்பு  செயல் திட்டத்துடன் முன்னணிப் பாத்திரத்தை வகித்தன.”அரகலயா”வின் விளைவாகத்தான் ராஜபக்ச குடும்பமும், இலங்கை அரசியல் மீதான அவர்களின்  கிடுக்கிப்பிடியும்,  பாரம்பரிய ஆளும் வர்க்க கட்சிகளின் வீழ்ச்சியும் நிகழ்ந்தன.

“அரகலயா”வின் மற்றும்மொரு  விளைவு : திசாநாயக்க தலைமையிலான ஜேவிபியின் முந்நாளைய தேர்தல் அணியான
தேசிய மக்கள் சக்தி(NPP- National People’s Power) மீட்சி பெற்றது.  

தேசிய மக்கள் சக்தி தொடக்க காலத்தில் இடதுசாரி  கண்ணோட்டத்தோடு  இருந்தாலும், போகப் போக பொருளாதார நிலைப்பாடுகளில் நீ்ர்த்துப் போய் ஆளும் வர்க்க நிகழ்ச்சி நிரல்கள்  பலவற்றை ஏற்றுக் கொண்டது.

பாரம்பரிய நவதாராளவாதக் கட்சிகளுக்கான மக்களின் ஆதரவு சரிந்த சூழலில்’தேசிய மக்கள் சக்தி’  திடமான ஆதரவை பெற்றது   அனைவரும் அறிந்ததே.

எவ்வாறாயினும்
தேர்தலுக்கு முன்பும் பின்பும்  திசாநாயக்கவின் கருத்துகள்  முரண்பாடாக உள்ளன. இலங்கையின் அரசியல்-பொருளாதாரச் சிக்கல்கள் முக்கியமானவற்றில் மக்கள் கருத்துக்களில் இருந்து  மாறுபட்ட கண்ணோட்டத்தை வெளிப்படுத்துகின்றன.’அரகலயா’ வெளிக்காட்டிய உயர்ந்த  முற்போக்கான-ஜனநாயக உணர்வுநிலை மற்றும் உத்வேகத்துடன் இணைந்ததாக  அவை இல்லை.

மிக முக்கியமானது என்னவெனில்,
தனக்குத் தானே மார்க்சிஸ்ட் என்று பட்டம் சூட்டிக்கொண்ட திசாநாயக்க 
மிகக் கடுமையான, மக்கள்-விரோத மற்றும் கார்ப்பரேட் நிபந்தனைகளை உடைய ஐஎம்எப்பின் ( சர்வதேச நாணய கழகத்தின்) 2.9 பில்லியன்டாலர்ரூபாய் 2,42,50,03,20,000 மதிப்பிலான  இலங்கைக்கான கடன் மீட்பு திட்டத்தை ரத்து செய்வதற்கு முன் வரவில்லை.

ஐஎம்எப் ( IMF ) உடனான இந்த ஒப்பந்தம் “ஏற்றுக் கொண்டாக வேண்டிய ஆவணம்” என்று  ‘தேசிய மக்கள் சக்தி’ வெளிப்படையாக அறிவிக்கிறது.
இதன் மூலம் தங்களின் வலது சார்பினை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.
  ஐஎம்எப்பின் ஒப்பந்தத்தை கிழித்தெறியவேண்டும் எனும் ‘அரகலயா’வின் உணர்வுக்கே இது எதிராய் இருக்கிறது.

இப்பொழுதோ
திசாநாயக்க ஐஎம்எப்புடன் “பேச்சுவார்த்தை”யை முன்மொழிகிறார். இது அவரின்  நவதாராளவாதக் கொள்கைகளை அப்பட்டமாக  எடுத்துக் காட்டுகிறது.   அமெரிக்காவை கட்டித் தழுவி அதன்  தலைமையிலான ஏகாதிபத்திய ஆணைகளுக்கு சரணடைவதின்  குறியீடே இவை .

இந்தியா மற்றும் சீனாவின் ஆட்சியாளர்கள் தத்தமது ஏகாதிபத்திய திட்டங்ளுடன்  திசநாயகவை  வாழ்த்துகின்றனர். இவ் வாழ்த்துகள் இலங்கை மக்களுக்கு வரும் நாட்களில் உறுதியாக நல்லதாக இருக்காது.

மேலும் ஒரு முக்கியமான உண்மை என்னவெனில்,
‘தேசிய மக்கள் சக்தி’ வடக்கு, கிழக்கு மற்றும் தமிழர்கள் உள்ளிட்ட சிறுபான்மை தேசிய இனங்கள்
குவிந்துள்ள இலங்கையின் மைய மாகாணங்களில் பெரிதாய் ஆதரவை பெறமுடியவில்லை.

தமிழ் சிறுபான்மை மக்களுடனான   வரலாற்றுரீதியான சிக்கலான உறவையும் சித்தாந்த எதிர்ப்பையும் கணக்கில் கொண்டு   தற்போது கணக்கின்றி  ‌நல்லிணக்க  (reconciliation) வாய்ச்சவடால்களை திசாநாயக்க  முன் வைக்கிறார்.
ஆனால் எதிர்வரும் நாட்களில்
மக்களின் கோரிக்கைகளை சரியான முறையில் கையாள்வது அவருக்கு எளிதான காரியமாக இருக்காது.

நம் கண்முன் இருக்கும் தரவுகளில் இருந்து துல்லியமாகச் சொல்வதெனில்,
  திசாநாயக்க முன்மொழியும்  இலங்கை வளர்ச்சி சார் ஏற்றுமதி  உள்ளிட்ட முக்கியமான  பொருளாதார-அரசியல் சிக்கல்களின் மீது  தற்போதைய அரச அமைப்பில் மாற்றங்கள்   அல்லாத  காரியவாத (pragmatic) அணுகுமுறையையே  மேற்கொள்வதற்கே நிர்ப்பந்திக்கப்படுவார்.

தற்போதைய நிலவரப்படி, இலங்கை எதிர்கொள்ளும் நெருக்கடியை திசாநாயக்க ஆட்சி மக்கள் பார்வையில் தீர்க்கும் என்ற நம்பிக்கை  வெறுமனே  நமது விருப்பபூர்வமான  சிந்தனையாக  மட்டுமே இருக்கிறது.

பி.ஜே.ஜேம்ஸ்
பொதுச்செயலாளர்
சிபிஐ எம் எல் ரெட் ஸ்டார்.( சுப.மனோகரன்..தமிழ்நாடு..செயலாளர்..9940176599)


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *